ஐபோன் பிரியர்களுக்கு ஒரு அருமையான செய்தியுடன் இன்றைய பதிவில் உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு ஸ்மார்ட் போனாக கருதப்படும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் தனிச்சிறப்பு கொண்டவை.
உலகில் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணியில் நின்று கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம், தனது அடுத்த ஐபோன் வெளியீடு பற்றிய தகவல்களை இணையத்தில் கிசிய விட்டுள்ளது.
ஐபோன்-இன் அடுத்த மாடல் 5SE என்று சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வந்த வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வரவிருக்கும் ஐபோன் மாடல் ஆனது SE (iPhone SE) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் போன், கீழ்வரும் வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐபோன் SE 16 GB மற்றும் 64 GB ஆன அளவுகளில் கிடைக்கும்.
802.11ac வைபை
லைவ் போட்டோ சப்போர்ட்
ப்ளூ டூத் 4.2
1642 mAh கணம் கொண்ட பேட்டரி
கேமரா 12 mp
மேலும் இந்த போன் அளவில் 4 இன்ச் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 6S மற்றும் 6S Plus-இல் காணப்படும் 3D தொடுதிரை இந்த புதிய மாடல்-இல் காணப்பட மாட்டது என தெரிவிக்கபடும் அதே வேலை இந்த ஸ்மார்ட் போன் வெளியீடு வரும் மார்ச் 21ஆம் திகதி உத்தியோக பூர்வமாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த புதிய ஐபோன் வெளியான பின்னர் தற்போது சந்தையில் இருக்கும் ஐபோன் 5S-இன் விலையானது 50% ஆல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விலையில் $400 டாலர் பெறுமதி கொண்ட ஐபோன் 5S வெறும் $225 டாலருக்கு கிடைக்க கூடியதாய் இருக்கும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் 12,000 – 13,000 INR-க்கு உட்பட்ட விலையில் ஐபோன் 5S-ஐ வாங்க முடியும்.
Tech in Tamil
iPhone
Tech News
வெளிவருகிறது ஐபோனின் புதிய மாடல் SE. தற்போது உள்ள ஐபோன் 5S 50% ஆல் விலை குறைப்பு..
