6 GB ரேம் மற்றும் சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்
இதே போன்று சீனாவின் பிரபல்யமான ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான Oppo தனது அடுத்த பிரம்மாண்டமான ஸ்மார்ட் போன் வெளியீடு பற்றிய செய்திகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
குறித்த ஸ்மார்ட் போன் Oppo R9 என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதோடு இந்த ஸ்மார்ட் போன் அதிகளவில் கேமரா தரத்தை கருத்திற்கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போனில் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், குறித்த ஸ்மார்ட் போனை வெறும் 15 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே இந்த 15 நிமிட பேட்டரி சார்ஜ் தொழினுட்பத்தை ஒரு சில நாட்களுக்கு முன்னர் Oppo நிறுவனம் Super VOOC என்ற பெயரில் உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த புதிய தொழினுட்பத்தை அவர்களுடைய அடுத்த ஸ்மார்ட் போன், அதாவது R9-இல் பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளார்கள். மேலும் இந்த ஸ்மார்ட் போன் 21 Mp அளவான அதி உயர் தரத்திலான கேமராவை கொண்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை தவிர, R9 ஸ்மார்ட் போன்,
6 இன்ச் [1440×2560] ரிசொலுசன் திரை
குவல்கொம் ஸ்நேப் 820 சிப்
4 GB ரேம்
64 GB மெமரி
21 Mp பின்பக்க கேமரா
13 Mp முன்பக்க கேமரா
3700 mAh அளவான பேட்டரி
அன்றொஇட் 6.0 இயங்குதளம் கொண்டதாக அமைய உள்ளது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் உலகெங்கிலும் விற்பனை செய்யப்படும் என்று குறித்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
