போட்டோ ஒன்றினுள் உங்களது மெசேஜ்-ஐ மறைத்து அனுப்பவது எப்படி?
ஆகவே இதே மாதிரியான விடயமொன்றை இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அதாவது போட்டோ ஒன்றிற்குள் உங்களது மெசேஜ், மற்றைய போட்டோகள், வீடியோ, பைல்ஸ் என்று உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த உபாயத்தை உங்களது கணனியில் செயற்படுத்த, உங்களது கணனியில் வின்ரார் எனப்படும் மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் இந்த மென்பொருள் அனைவரின் கணணியிலும் நிறுவப்பட்டிருக்கும்.
உங்களது கணனியில் இந்த மென்பொருள் இல்லை என்றால், இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ள முடியும்.
சரி.. அடுத்து நீங்கள் போட்டோ ஒன்றிற்குள் மறைக்க நினைக்கும் அனைத்து பைல்-களையும் உங்களது கணனியின் டெஸ்க்டாப்-இற்கு கோபி செய்யுங்கள்.
அடுத்து இந்த அனைத்து பைல்-களையும் தெரிவு செய்து ரைட் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அங்கே Add to archive என்று காணப்படுவதை கிளிக் செய்து குறித்த பைல் -களை சுருக்கி, ரார் பைல் ஆக உங்களது டெஸ்க்டாப்-இல் சேமித்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் குறித்த அனைத்து பைல்-களையும் போட்டோ ஒன்றினுள் மறைக்க நினைக்கும், குறித்த போட்டோவை உங்களது கணனியின் டெஸ்க்டாப்-இல் கோபி செய்யுங்கள்.
இப்போது குறித்த போட்டோவும், அதே போல் நீங்கள் உருவாக்கிய ரார் பைல்-உம் உங்களது டெஸ்க்டாப்-இல் காணப்படும்.
CMD-இல் cd desktop என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
அடுத்து போட்டோ-விற்கு வழங்கிய பெயரையும் ரார் பைல்-இற்கு வழங்கிய பெயரையும் CMD மூலம் இணைக்க வேண்டும். இதை செய்வது எப்படி என்று கீழே பார்ப்போம்.
copy /b myphoto.jpg + desktop.rar என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள். (இந்த கமான்ட்-இல் நீங்கள் வழங்கிய ரார் பைல்-இன் பெயர் மற்றும் போட்டோ-வின் பெயர் என்பவற்றை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)
இப்போது குறித்த அனைத்து பைல்-களும், டெஸ்க்டாப்-இல் இருக்கும் போட்டோ-விற்குள் மறைக்கப்பட்டு விட்டது.
இப்போது நீங்கள் போட்டோ-விற்குள் மறைத்த அனைத்து பைல்-களையும் பார்க்க வேண்டும் என்றால், குறித்த போட்டோவை வின்ரார் மூலம் திறவுங்கள்.
இதை செய்ய குறித்த போட்டோ-வை ரைட் கிளிக் செய்து Open with என்பதில் வின்ரார் என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது நீங்கள் போட்டோ-விற்குள் மறைத்து வைத்த அனைத்து பைல்-களையும் பார்க்க கூடியதாய் இருக்கும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரகசியமாக அனுப்ப நினைக்கும் அனைத்து பைல்-களையும் மிக இலகுவாக போட்டோ ஒன்றினுள் மறைத்து உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்ப முடியும்.

