எமது தளத்தில், உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்திலும் இன்டர்நெட்-ஐ எப்படி உபயோகிப்பது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவற விட்டு இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கணணி அல்லது ஸ்மார்ட் போன்களில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்திலும் இன்டர்நெட்-ஐ உபயோகிப்பது எப்படி?
ஆகவே இன்றும் இதே மாதிரியான மற்றுமொரு பயனுள்ள விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது, எமக்கு குறித்த ஒரு இடம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால், நாம் அடுத்த நொடியே எமது ஸ்மார்ட் போனை எடுத்து கூகுள் மேப் மூலம் குறித்த இடத்தை மிக இலகுவாக தேடிக்கொள்வோம்.
ஆனால் கூகுள் மேப்-ஐ உங்களது போனில் உபயோகிக்க வேண்டும் என்றால், உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் கூகுள் மேப்-ஐ அணுக முடியாது.
ஆனால் இன்றைய பதிவில் உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் கூட கூகுள் மேப்-ஐ எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
முதலாவதாக உங்களது போனில் கூகுள் மேப்-இற்கு செல்லுங்கள். (இதற்கு இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்)
அடுத்து கூகுள் மேப்-இல் உங்களுக்கு தேவையான இடத்தை அல்லது அதை சூழ உள்ள இடத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து மேலே இடது மூலையில் இருக்கும் 3 டொட்-களை கிளிக் செய்து Offline areas என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் காணப்படும் (+) ஐகான் -ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் திரையில், நீங்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நினைக்கும் இடத்தின் மேப்-ஐ, குறித்த சதுரத்தில் தெரிவு செய்து உங்களது போனிற்கு டவுன்லோட் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் நீங்கள் சேமிக்க நினைக்கும் குறித்த மேப்-இற்கு எதாவது ஒரு பெயரை வழங்குங்கள்.
அவ்வளவு தான். இப்போது குறித்த கூகுள் மேப் ஆனது உங்களது போனிட்கான ஒப்லைன் பயன்பாட்டிற்கு தரவிறக்கப்படும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
இப்போது உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் கூகுள் மேப்-ஐ திறந்தால், நீங்கள் ஒப்லைன் ஆக சேமித்த, குறித்த இடத்தின் மேப் காட்டப்படும். அதில் உங்களது தேவைக்கு ஏற்ற போல குறித்த இடத்தின் மேப்-ஐ பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி மிக இலகுவாக கூகுள் மேப்-ஐ இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் உங்களது போனில் இருந்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
iPhone
Tips and Tricks
இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?




