ஆண்ராயிடில் உங்களுக்கு பிடித்த பாடலின் குறித்த பகுதியை ரிங்கிங் டோன்-க்கு தனியாக பிரித்து எடுப்பது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் நாம் வைக்கும் ரிங்கிங் டோன் சம்மந்தப்பட்டது தான் இந்த பதிவு. இன்று காணப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அதட்கேன்று குறிப்பிட்ட சில ரிங்கிங் டோன்கள் காணப்படுகின்றன. ஆனால் ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் நம்மில் பலர் எம்முடைய போனில் காணப்படும் ரிங்கிங் டோன்களை எமது போனுக்கான ஒலியாக வைப்பதில்லை.

அதற்கு பதிலாக எமக்கு பிடித்த பாடல் ஒன்றின் ஆரம்ப இசையையோ அல்லது வேறு ஏதேனும் எமக்கு மிகவும் பிடித்த ஒரு இசையின் குறிப்பிட்ட பகுதியையோ தான் எமது ஸ்மார்ட் போனின் அழைப்புக்களுக்கான டோன் ஆக வைத்து இருப்போம்.


ஆனால் எம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை, எமக்கு பிடித்த பாடல்களின் இசையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை  மட்டும் எப்படி தனியாக பிரித்து எடுப்பது என்பதாகும். தமக்கு பிடித்த பாடல்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுக்க சிலர், தமது கணனிகளில் குறிப்பிட்ட சில மென்பொருட்களை உபயோகிக்கின்றனர்.

இனி அந்த அளவுக்கு எல்லாம் உங்களது நேரத்தை வீணடித்து கொண்டு இருக்க தேவையில்லை. உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இருந்தபடியே மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த இசையின் குறிப்பிட்ட ஒரு பகுதியை தனியாக பிரித்து எடுத்து உங்களது போனின் அழைப்புக்களுக்கான ரிங்கிங் டோன் ஆக வைத்து கொள்ள முடியும்.

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை உங்களது அன்றொஇட் போனில் ஆரம்பியுங்கள்.

இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து பாடல்களும் இந்த செயலியில் பட்டியலிடப்படும்.


அதிலே நீங்கள் ரிங் டோன் ஆக வைக்க நினைக்கும் பாடலை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் குறித்த பாடலில் இருந்து தனியாக பிரித்து எடுக்க நினைக்கும் பாடல் பகுதியின் நேர இடைவெளியை சரியாக தெரிவு செய்யுங்கள்.

தெரிவு செய்த பின்னர் மேலே வலது மூலையில் இருக்கும் சேமிப்பு ஐகான்-ஐ கிளிக் செய்து குறித்த பாடலில் இருந்து தனியாக பிரித்து எடுக்கப்பட்ட பகுதியை உங்களது போனில் சேமித்து கொள்ளுங்கள்.


ஆகவே இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

அன்றொஇட் சிறப்பு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு
எனவே இந்த முறையை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த பாடல்களின் அல்லது இசையின் குறித்த ஒரு பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுத்து உங்களது போன் ரிங்டோன் ஆக வைத்து கொள்ள முடியும்.