அந்த பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி?
உங்களது கல்லூரியில் அல்லது அலுவலகத்தில் ப்லோக் செய்த தளங்களை எப்படி அச்செஸ் செய்வது?
அதன் தொடர்ச்சியாக கல்லூரி மற்றும் அலுவலகங்களில் காணப்படும் இணைய இணைப்புடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பயனுள்ள விடயத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதாவது கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் எமது கணணி அல்லது லேப்டாப்-இற்கு இணைக்கப்பட்டிருக்கும் இணைய இணைப்பை எப்படி எமது ஸ்மார்ட் போன்களுக்கு ஷேர் செய்து கொள்வது என்பதே எமது இன்றைய பதிவாக அமைய போகிறது.
இந்த உபாயத்தை பயன்படுத்தி எமது கல்லூரி அல்லது அலுவகலங்களில் காணப்படும் கணனிகளில் இணைக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு சில நொடிகளில் ஷேர் செய்து விடலாம்.
ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமில்லாது மேலும் 10 வைபை வசதி இருக்கும் டிவைஸ்-களுடன் கூட குறித்த ஒரு கணனியின் இன்டர்நெட்-ஐ பகிர்ந்து கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் விண்டோஸ் கணனிகளுக்கான சிறப்பு மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி உங்களது கல்லூரி அல்லது அலுவலக கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளை ஆரம்பித்து,
அதிலே உங்களது வைபை ஹாட்ஸ்பொட்-க்கான பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை வழங்குங்கள்.
அடுத்து Internet Source என்று இருப்பதில் உங்களது கணனியில் இருக்கும் சரியான இன்டர்நெட் இணைப்பை தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான். அடுத்து Start Hotspot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போனில் வைபை-ஐ ON செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய வைபை இணைப்புடன் உங்களது போனை இணைத்து கொள்ள முடியும்.
கீழே படத்தில் காட்டியிருப்பது போல் குறித்த வைபை இணைப்புடன் இணைந்துள்ள அனைத்து டிவைஸ்களின் விபரங்களையும் பார்த்து கொள்ள முடியும்.
கணனிகளில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் இந்த அருமையான மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
