வாட்ஸ்அப் பற்றிய பல்வேறு தகவல்கள் எமது தளத்தில் அடிக்கடி வந்து போயுள்ளன. இதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் வாட்ஸ்அப்-இன் முக்கியத்துவமே.
குரும்செய்தி அனுப்புவது மெல்ல மெல்ல குறைவடைந்து தற்போது எல்லாமே வாட்ஸ்அப் என்று ஆகி விட்டது. எம்முடைய உறவினர் நண்பர்களுக்கு எம்முடைய போட்டோ மற்றும் வீடியோகளை பகிர்ந்து கொள்வது, எமது உணர்வுகளை Emoji-கள் மூலம் பகிர்ந்து கொள்வது என்று பல்வேறு வசதிகளை தருவது மட்டுமில்லாமல், எமது நண்பர்களுடன் குழுவாக அரட்டை அடிப்பது என்று மேலும் பல வசதிகளை எமக்கு தருகிறது இந்த ஸ்மார்ட் போன்களுக்கான மெசெஞ்சர் செயலி.
இந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், புதிதாக எமது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து PDF, PPT போன்ற பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியானது கல்வி சம்மந்தமான பைல்-களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். ஏற்கனவே எமக்கு தெரிந்தது போல, கல்வி சம்மந்தமான கோப்புக்கள் பெரும்பாலும் PDF அல்லது PPT பைல்-களாகவே காணப்படுகின்றது.
ஆகவே வாட்ஸ்அப்-இன் இந்த புதிய வசதியானது மாணவர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம், உலகில் உபயோகிக்கப்படும் பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் ப்ரேன்ட்-களான ஐபோன் மற்றும் அன்றொஇட் போன்றவைகளுக்கு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியை உங்களது அன்றொஇட் மற்றும் ஐபோன்-களில் பெற்றுக்கொள்ள தற்போது நீங்கள் உபயோகித்து கொண்டிருக்கும் வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள்.
அப்டேட் செய்து முடித்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறந்து மேலே வலது மூலையில் காணப்படும் Attachment ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் Document என்ற புதிய வசதி ஒன்று காணப்படும்.
இந்த வசதியை பயன்படுத்தி உங்களது நண்பர்களுடன் உங்களுக்கு தேவையான டாகுமென்ட் பைல்-களை மிக இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும்.
பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து எதிர்காலத்தில் கூட இன்னும் பல்வேறுபட்ட புதிய வசதிகளை எதிர்பார்க்க முடியும் என்று வாட்ஸ்அப் டிவலபர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
Tech in Tamil
Android
iPhone
Tech News
WhatsApp
வாட்ஸ்அப்-இல் டாகுமெண்ட்ஸ் கோப்புக்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

