எமது தளத்தில் அடிக்கடி வைவை சம்மந்தமான பதிவுகள் எழுதப்படுவது நீங்கள் யாவரும் அறிந்த விடயமே. ஸ்மார்ட் போன் மற்றும் கணணிகளை பயன்படுத்துவோருக்கு வைபை சம்மந்தமான உபாயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலேயே எமது தளத்தில் இது சம்மந்தமான பதிவுகள் அடிக்கடி எழுதப்படுகின்றன.
அந்த வகையில் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட மிகச்சிறந்த வைபை சம்மந்தமான ஒரு சில பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து கொள்ள முடியும்.
கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி?
உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்வது எப்படி?
உங்களது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போன் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
கல்லூரி அல்லது அலுவலக கணனியில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் ஷேர் செய்வது எப்படி?
ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு அதிபயங்கரமான வைபை உபாயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
அதாவது உங்களுடைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம், குறிப்பிட்ட ஒரு வைபை நெட்வொர்க்-ஐயே கட்டுப்படுத்துவது எப்படி என்பதாகும். இந்த உபாயம் போன் மூலம் உங்களது அலுவலக வைபை நெட்வொர்க்-ஐ அல்லது உங்களது கல்லூரி வைபை நெட்வொர்க் அப்படியும் இல்லையாயின் வேறு ஏதேனும் ஒரு ஒட்டுமொத்த வைபை நெட்வொர்க்-ஐயே உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.
எப்படி என்றால், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் டிவைஸ்-களில் எந்த எந்த டிவைஸ்-கள், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். (உங்களது ஸ்மார்ட் போனும் குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)
நீங்கள் இந்த டிவைஸ், இந்த வைபை நெட்வொர்க்-இல் இருக்க தேவையில்லை என்று நினைத்தால், ஒரு கிளிக் மூலம் குறித்த டிவைஸ்-ஐ வைபை நெட்வொர்க்-இல் இருந்து நீக்கி விட முடியும்.
குறிப்பு
இந்த உபாயத்தை உங்களது ஆன்ராயிடு போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், கட்டாயமாக உங்களது ஆன்ராயிடு போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன? இதை செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றிய பதிவுகள் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டன. ஆகவே உங்களது ஆன்ராயிடு போன் இன்னும் ரூட் செய்யப்படவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?
அன்ராயிடு போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்
இந்த அளவுக்கு அதிசக்தி வாய்ந்த இந்த உபாயத்தை உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக, கீழே வழங்கப்பட்டுள்ள வைபை நெட்வொர்க்கை கட்டுப்படுத்தகூடிய ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ரூட் அனுமதியை வழங்குங்கள்.
அடுத்து இந்த செயலியில் மேலே வலது மூலையில் காணப்படும் Start ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் அனைத்து டிவைஸ்-களும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
இதிலே காட்டப்படும் டிவைஸ்-களில், நீங்கள் குறித்த வைபை நெட்வொர்க்-இல் இந்த டிவைஸ் இருக்க தேவையில்லை என்று நினைக்கும் டிவைஸ்-ஐ தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Grab என்பதை கிளிக் செய்து விட்டு, 'கில்' என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது குறித்த டிவைஸ், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இருந்து நீக்கப்பட்டு விடும்.
இந்த அதிசக்தி வாய்ந்த ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனிற்கு தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.
இது ஒரு ஹேக்கிங் சம்மந்தப்பட்ட செயலி என்பதால், கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இதை கூகுள் சர்ச் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்.
கீழே படத்தில் காட்டியுள்ளவாறு 'வை பை கில்' என்று கூகுள் சர்ச் செய்யுங்கள்.
கிடைக்கும் முடிவில் காணப்படும் முதலாவது தளத்திற்கு சென்று, குறித்த செயலியை நிறுவுவதற்கான டவுன்லோடரை தரவிறக்கி உங்களது போனில் நிறுவுங்கள்.
அடுத்து குறித்த டவுன்லோடரை உங்களது போனில் ஆரம்பித்து, 'வைபை கில் ப்ரீ வெர்சன்' செயலியை உங்களது போனிற்கு தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
Tech in Tamil
Android
Tips and Tricks
கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வைபை நெட்வொர்க்-ஐயே உங்களது போனில் இருந்து கட்டுப்படுத்தும் அதிபயங்கர ட்ரிக்





