ஆப்பிள் போனின் புதிய மாடல் ஐபோன் SE அறிமுகமாகி உள்ளது. இதன் வசதிகள், விலை பற்றிய சிறப்பு பார்வை..

அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு விடயம், ஐபோன்-இன் அடுத்த தயாரிப்பு. இந்த ஸ்மார்ட் போன் பற்றிய வதந்திகள் இணையத்தில் பரவ விடப்பட்ட நாள் தொடக்கமே இந்த ஸ்மார்ட் போன் iPhone SE என்று பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எமது தளத்திலும் இது குறித்தான பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது.

இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று, (21/03/2016) ஐபோனின் புதிய மாடலான ஐபோன் SE உலகமெங்கும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய ஸ்மார்ட் போனில் காணப்படும் சிறப்பு வசதிகள் மற்றும் இதன் விலை சம்மந்தமான ஒரு சிறிய பார்வை உங்களுக்காக...


இந்த ஸ்மார்ட் போன் கைக்கடங்கக்கூடிய அளவில் 4 இன்ச் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 இன்ச் ரெடினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

64-பிட் ஆப்பிள் A9 ப்ரோசெஸ்சர் (இது ஐபோன் 6S-இல் பயன்படுத்தப்படும் ப்ரோசெஸ்சர் ஆகும்)

12 மெகாபிக்ஸ்அல் கேமரா

லைவ் போட்டோ மற்றும் 4K வீடியோ வசதி

அதிவேக LTE, மற்றும் வைபை  (802.11ac) தொழிநுட்பம்

சிறந்த பேட்டரி வாழ்க்கை

Face time HD கேமரா

தொடுதிரை ID லாக்
ஐ போன் 5S -ஐ விட இரு மடங்கு ப்ரோசெஸ்சர் வேகம்

ஐ போன் 5S -ஐ விட நான்கு மடங்கு கிராபிக்ஸ் அதிகம்

பரிந்துரைக்கப்படும் பதிவு

தோற்றத்தில் ஐபோன் 5S போன்றும், வசதிகளில் ஐபோன் 6S போன்றும் காணப்படும் இந்த புதிய ஐபோன் SE-இன் விலை 400 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அதாவது இந்திய விலையில் கிட்டத்தட்ட 26,500 ரூபாய். இந்த புதிய ஐபோனில் கிடைக்கும் வசதிகளையும் விலையையும் ஒப்பிட்டு பார்த்தால், இது பட்ஜெட் ஐபோன் என்றே கூறத்தோன்றுகிறது.

26,500 ரூபாய்க்கு கிட்டத்தட்ட ஐபோன் 6S-இல் காணப்படும் பெரும்பாலான வசதிகளை தரும் இந்த புதிய ஐபோன் SE, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.