பெண்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கு விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?

இந்த பதிவிலே விண்டோஸ் இயங்குதளம் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் எமது கணணியை போர்மட் செய்ய நேர்ந்தால், எமது கணனிக்கு மறுபடியும் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ விண்டோஸ் டி வி டி  தேவைப்படும். ஆனால் விண்டோஸ் டி வி டி ஒன்று எம்மிடம்  இல்லாத சந்தர்ப்பத்தில் டி வி டி-க்கு பதிலாக எம்மிடம் இருக்கும் பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தை கணனிக்கு நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

எமது தளத்தில் ஏற்கனவே விண்டோஸ் இயங்குதளத்தை எது விதமான பெண் டிரைவ் டி வி டி எதுவுமே இல்லாமல் நேரடியாக நிறுவி கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


சரி.. இன்றைய பதிவில் பெண் டிரைவ் ஒன்றை விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்றி உங்களுக்கு தேவையான எந்த ஒரு விண்டோஸ் இயங்குதளத்தையும் மிக இலகுவாக கணனிக்கு நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களுக்கு தேவையான விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

அடுத்து கீழே குறிப்பிட்டுள்ள, பெண் டிரைவ் ஒன்றை விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்ற கூடிய சிறப்பு மென்பொருளை உங்களது கணனிக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.

அடுத்து இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பித்து அதிலே உங்களது பெண் டிரைவ்-ஐ தெரிவு செய்து செய்யுங்கள்.


அடுத்து கீழே காட்டப்பட்டிருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


அதன் பின்னர் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கி வைத்துள்ள விண்டோஸ் இயங்குதள ISO பைல்-ஐ தெரிவு செய்து விட்டு Start என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது பெண் டிரைவ் பூடபல் டிவைஸ் ஆக மாற தயாராகி விட்டது.

ஆகவே மிக இலகுவாக பெண்டிரைவ்-ஐ விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்ற கூடிய சிறப்பு மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பெண்டிரைவ் விண்டோஸ் பூடபல் மென்பொருள்

சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களது பெண் டிரைவ் விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாறிய பின்னர், உங்களது கணணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு, Bios செட்டிங்க்ஸ்-இற்கு சென்று, அங்கே பூடபல் டிவைஸ் ஆக பெண்டிரைவ்-ஐ தெரிவு செய்து விட்டு, மிக இலகுவாக உங்களது கணணியை போர்மட் செய்து புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுங்கள்.