- வாட்ஸ் அப்
- வைபர்
- பேஸ்புக் மெசெஞ்சர்
- டெலிக்ரம்
மேலே குறிப்பிட்ட அனைத்து செயலிகளும், பெரும்பாலும் உங்களது ஸ்மார்ட் போனில் ஏற்கனவே நிறுவப்பட்டு இருக்கும். ஆனால் இன்று பெரும்பாலானோர் இவ்வாறான பயனுள்ள மெசஞ்சர் சேவைகளை ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது, கணனியில் இருந்தும் கூட பாவிக்க தொடங்கி விட்டார்கள். ஆகவே இன்றைய பதிவில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மெசஞ்சர் சேவைகளையும், எமது கணணி அல்லது லேப்டாப்-இல் இருந்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
வாட்ஸ்அப்-ஐ கணனியில் இருந்து பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் -ஐ நீங்கள் கணனியில் அல்லது லேப்டாப்-இல் இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், முதலாவதாக உங்களது போனில் இருக்கும் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள். அதிலே 'வாட்ஸ்அப் வெப்' என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களது போன் கேமரா திறக்கப்படும்.
அடுத்து, வாட்ஸ்அப் -இன் அதிகார பூர்வ தளமான வாட்ஸ்அப் வெப்-இற்கு கணனியில் இருக்கும் ஏதேனும் ஒரு உலாவி மூலம் சென்று அங்கே காணப்படும் QR Code-ஐ உங்களது போன் கேமரா மூலம் ஸ்கேன் செய்வதால், உங்களுடைய போனில் இருக்கும் வாட்ஸ்அப் கணக்கு வாட்ஸ்அப் வெப்-இல் திறக்கப்படும்.
வாட்ஸ்அப் வெப்-இற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.
வைபர்-ஐ கணனியில் இருந்து பயன்படுத்துவது எப்படி?
வைபர் சேவையை உங்களது கணணி அல்லது லேப்டாப்-இல் இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், வைபர் சேவையின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்கே உங்களது விண்டோஸ் கணனிக்கான வைபர் செயலியை இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
விண்டோஸ் கணனிக்கான வைபர் செயலியை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பேஸ்புக் மெசஞ்சர்-ஐ கணனியில் இருந்து பயன்படுத்துவது எப்படி?
பேஸ்புக் மெசஞ்சர்-ஐ கணனியில் இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், பேஸ்புக் மெசஞ்சர்-இல் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்கே உங்களது மெசஞ்சர் கணக்கு விபரங்களை வழங்கி லொகின் செய்ய முடியும்.
கணனியில் இருந்து பேஸ்புக் மெசஞ்சர்-ஐ பயன்படுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்.
டெலிக்ரம்-ஐ கணனியில் இருந்து பயன்படுத்துவது எப்படி?
டெலிக்ரம் சேவையை உங்களது கணணி அல்லது லேப்டாப்-இல் இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், டெலிக்ரம் சேவையின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்கே உங்களது விண்டோஸ் கணனிக்கான டெலிக்ரம் செயலியை இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
விண்டோஸ் கணனிக்கான டெலிக்ரம் செயலியை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆகவே இனி மிக இலகுவாக உங்களது கணனியில் இருந்தபடியே இந்த அனைத்து மெசஞ்சர் சேவைகளையும் பயன்படுத்தி கொள்ள முடியும்.


