ஆகவே இன்றையை பதிவில் நம்முடைய அன்றொஇட் போனுடன் சம்மந்த்தப்பட்ட ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்கிறேன். சாதரணமாக எமது ஸ்மார்ட் போனிற்கு ஏதேனும் ஒரு செயலி தேவை என்றால் நாம் உடனே கூகுள் ப்லே ஸ்டோர்-இற்கு சென்று எமக்கு தேவையான செயலியை தரவிறக்கி கொள்வோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் எதாவது ஒரு செயலியை தரவிறக்க முற்படும் போது குறிப்பிட்ட சில எரர் வாசகங்கள் தோன்றும்.
ஆகவே இந்த பதிவில், அப்படி நாம் அன்றொஇட் போனுக்கான செயலிகளை தரவிறக்க முற்படும் போது ஏற்படும் எரர்-களுக்கான தீர்வை பார்ப்போம்.
கூகுள் ப்லே ஸ்டோர்-இல் செயலிகளை தரவிறக்க முற்படும் போது, குறிப்பிட்ட சில எரர் வாசகங்கள் தான் பொதுவாக தோன்றும். ஆகவே அந்த எரர் வாசகங்கள் என்ன, அதற்கான தீர்வு எது என்பதை இந்த பதிவிலே தெரிந்து கொள்வோம்.
கூகுள் ப்லே ஸ்டோர்-இல் நாம் எதாவது செயலி ஒன்றை தரவிறக்க முற்படும் போது வரும் எரர் வாசகங்களை கீழே குறிப்பிட்டுள்ள முறை மூலம் பெரும்பாலும் சரி செய்து கொள்ளலாம்.
உங்களது போன் Settings-இற்கு சென்று Apps-இற்கு செல்லுங்கள்.
அங்கே Google play Services என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதிலே Force Stop என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து Clear Data என்பதை கிளிக் செய்து விட்டு அதற்கு அடுத்ததாக Clear Cache என்பதையும் கிளிக் செய்யுங்கள்.
இவை தவிர மேலும் சில பொதுவான கூகுள் ப்லே ஸ்டோர் எரர்கலும் அதற்கான தீர்வுகளையும் கீழே வரிசைப்படுத்தி உள்ளேன்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 101
காரணம் - உங்களது போனில் அதிகளவான ராம் பாவனை காரணமாகவே இந்த எரர் வாசகம் வருகிறது.
தீர்வு - தேவையில்லாத செயலிகளை நீக்கி விட்டு முயற்ச்சித்து பாருங்கள்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 403
காரணம் - இந்த எரர் வருவதற்கான காரணம் உங்களது கூகுல் கணக்கு தான்.
தீர்வு - ப்லே ஸ்டோர்-இல் செட்டிங்-ஐ Reset செய்து விட்டு தரவிறக்க முயற்ச்சித்து பாருங்கள்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 492
காரணம் - இந்த எரர் வருவதற்கான காரணம் கூகுள் சர்வீஸ் Cache மெமரி தான்.
தீர்வு - உங்கள் போனில் Settings சென்று Apps-ஐ தெரிவு செய்து > Google services -> Clear Data.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 495
காரணம் - இந்த எரர் நீங்கள் எதாவது ஒரு செயலியை அப்டேட் செய்ய முற்படும் போது வரும்.
தீர்வு - உங்கள் போனில் Settings சென்று Apps-ஐ தெரிவு செய்து > Google services -> Clear Data.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 498
காரணம் - குறிப்பிட்ட செயலிகளை தரவிறக்க முற்படும் போது இந்த எரர் வரும்.
தீர்வு - உங்களது போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத செயலிகளை நீக்கி விட்டு தரவிறக்க முயற்சியுங்கள்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
கூகுள் ப்லே ஸ்டோர் Error 919
காரணம் - இந்த எரர் நீங்கள் தரவிறக்கிய செயலிகளை திறக்க முற்படும் போது வரும்.
தீர்வு - உங்களது போனில் மெமரி-யை சிறிதளவு ப்ரீ ஆக்கி விட்டு முயற்சியுங்கள்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 920
காரணம் - இந்த எரர் வருவதற்கு காரணம் உங்களது இன்டர்நெட் இணைப்பில் எதாவது சிக்கல் இருப்பதே.
தீர்வு - ஒரு முறை போனை Off செய்து விட்டு On செய்து தரவிறக்கி பாருங்கள். அல்லது வை-பை மூலம் தரவிறக்கி பாருங்கள்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 921
தீர்வு - உங்கள் போனில் Settings சென்று Apps-ஐ தெரிவு செய்து > Google services -> Clear Data.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 927
காரணம் - இந்த எரர் வர காரணம் உங்களது கூகுள் ப்லே ஸ்டோர்-இல் எதாவது அப்டேட் சென்று கொண்டிருத்தல்.
தீர்வு - சிறிது நேரத்தின் பின்னர் முயற்சி செய்து பார்த்தால் செயலிகளை தரவிறக்க முடியும். அப்படியும் முடியவில்லை என்றால் உங்களது போனை ஒரு முறை Restart செய்யுங்கள்.
கூகுள் ப்லே ஸ்டோர் Error 941
தீர்வு - உங்கள் போனில் Settings சென்று Apps-ஐ தெரிவு செய்து > Google Play Store -> Clear Data.


