ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கான மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று வந்திருக்கிறேன்.
எமது தளத்தில் ஏற்கனவே குறித்த ஒரு நாட்டிற்கு இல்லை என்று கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் செயலிகளை எப்படி எமது போனுக்கு மிக இலகுவாக தரவிறக்கி நிறுவி கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கூகுள் ப்லே ஸ்டோரில் 'உங்களது நாட்டிற்கு இல்லை' என்று காணப்படும் செயலிகளை எமது போனுக்கு இன்ஸ்டால் செய்வது எப்படி?
ஆகவே இன்றும் இதே மாதிரியான கூகுள் ப்லே ஸ்டோர் செயலிகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
அதாவது கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் சில செயலிகளை எமது போனுக்கு நிறுவி கொள்ள முடியாது. குறித்த செயலி உங்களது போன் மாடலுக்கு இல்லை என்று வருவதை அவதானித்து இருப்பீர்கள்.
ஆகவே இவ்வாறு கூகுள் ப்லே ஸ்டோரில் உங்களது போனுக்கு இல்லை என்று காணப்படும் செயலிகளை உங்களது போனில் நிவுவி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக கூகுள் ப்லே ஸ்டோரிட்கு சென்று உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொள்ளுங்கள்.
அடுத்து குறித்த செயலியின் இணையத்தள URL-ஐ பிரதி செய்யுங்கள்.
அடுத்து கீழே பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு செல்லுங்கள்.
இங்கேயிருந்து, ப்லே ஸ்டோரில் உங்களை தரவிறக்க விடாமல் தடுத்த குறித்த செயலியை எப்படி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
இப்போது இந்த தளத்தில், குறித்த செயலியில் URL-ஐ பேஸ்ட் செய்து சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த செயலியை நேரடியாக தரவிறக்கி கொள்வதற்கான லிங்க் கிடைக்கம்.
அதிலே டவுன்லோட் என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான செயலியை நேரடியாக தரவிறக்கிய பின், உங்களது போனுக்கு குறித்த செயலியை பிரதி செய்து மிக இலகுவாக நிறுவி கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
கூகுள் ப்லே ஸ்டோரில் 'உங்களது போனுக்கு இல்லை' என்று காணப்படும் செயலிகளை எமது போனுக்கு நிறுவுவது எப்படி?


