வாட்ஸ்அப்-இன் புதிய வசதியால் வாட்ஸ்அப் இந்தியாவில் தடை செய்யப்படலாம்..

பலகோடி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் பற்றிய முக்கிய செய்தி ஒன்றுடன் இன்று வந்திருக்கிறேன். எம் அனைவருக்குமே தெரிந்து போல, அண்மையில் வாட்ஸ்அப் தனது அதிசிறந்த பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தியது. அதாவது யாருமே வாட்ஸ்அப் அழைப்பையோ அல்லது மெசேஜ்-களையோ ஹேக் செய்ய முடியாதபடி புதிய என்க்ரிப்சன் முறையை அறிமுகப்படுத்தி இருந்தது.

மேலும் கூறினால், வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தாலும் எம்முடைய மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் அழைப்புக்களை பார்க்கவோ/ கேட்கவோ முடியாது.

கோடிக்கணக்கான வாட்ஸ்அப் பயனர்களை ஹேகர்களிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி உலகலாவிய ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.


எமது தளத்திலும் வாட்ஸ்அப் என்க்ரிப்சன்-ஐ செயற்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஹேகர்களிடம் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை பாதுகாக்க புதிய என்க்ரிப்ட் முறை

இவ்வளவு பாதுகாப்பு மிக்க வாட்ஸ்அப் என்க்ரிப்சன் முறை, தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை ப்லோக் செய்யப்படுவதட்கான முதல் வித்தை இட்டுள்ளது.

என்னவென்று ஆச்சரியமாக கேட்கிறீர்களா? எமது வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருப்பது நல்ல விடயம் தானே..! பின்னர் ஏன் வாட்ஸ்அப் ப்லோக் செய்யப்படுவதட்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறீர்கள்? என்று..

இந்த அதிகூடிய பாதுகாப்பு முறை தான் வாட்ஸ்அப் இந்தியாவில் ப்லோக் செய்யப்படுவதட்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. ஏன் என்று விளக்கமாக கூறுகிறேன்.
இந்திய நாட்டின் தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு அமைய இந்திய நாட்டிற்குள் பயன்படுத்தப்படும் எந்த ஒரு ஆன்லைன் என்க்ரிப்சன் முறையும் '40 பிட் என்க்ரிப்சன்'-க்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் தற்போது வாட்ஸ்அப்-இல் பயன்படுத்தப்பட்டு வரும் என்க்ரிப்சன் முறையில் '256 பிட் கீ' என்க்ரிப்சன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி என்றால், ஹேகர்களை விட்டு வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தால் கூட எங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்க்க முடியாது.

இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு முறையால் வாட்ஸ்அப் மூலம் ஹேக்கர்கள், தீவிரவாதிகள் மற்றும் சமூகத்தை சீர்குலைப்பவர்கள் தங்களது தகவல்களை மிக இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால், இது இந்திய சைபர் க்ரைம்-ஐ தாண்டி செயற்படும் ஒரு பாதுகாப்பு முறையாக கருதப்படுகிறது.

ஆகவே இந்த அதிஉயர் என்க்ரிப்சன் பாதுகாப்பு முறையை இந்தியாவில் செயற்படுத்த முன்னர், வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் அப்படி செய்யவில்லை.

இதனால் வாட்ஸ்அப் இந்தியாவில் தடை செய்யப்படுவதட்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பிரபல்ய தளமான 'டெக்கன் க்ரோநிகல்' தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.