அதிகளவான அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் உலகெங்கும் இருப்பதால் எம்முடைய தளத்தில் அடிக்கடி அன்றொஇட் ஸ்மார்ட் போன் சம்மந்தமான பதிவுகள் உங்களை தொட்டு செல்கின்றன. அந்த வகையில் எமது தளத்தில் அண்மையில் வெளியான மிகச்சிறந்த ஒரு சில பதிவுகளின் லின்க்கை கீழே காணலாம்.
இந்த பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய பதவில் மற்றுமொரு பயனுள்ள அன்றொஇட் உபாயத்துடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான ஒரு தேவை தான், ஒரே ஸ்மார்ட் போனில் தங்களுடைய ஆன்லைன் கணக்குகளை 2 ஆக உபயோகிப்பது. அதாவது ஓரே ஸ்மார்ட் போனில் 2 பேஸ்புக் கணக்குகள் பயன்படுத்துவது, 2 வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது, அல்லது 2 வைபர் கணக்குகள் பயன்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலியை இரண்டாக பயன்படுத்துவது.
சாதாரணமாக எம்முடைய ஸ்மார்ட் போன்களில் இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட ஓரே செயலியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை உபயோகிக்க முடியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம்.
இனி உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனில் 2 பேஸ்புக், 2 வாட்ஸ்அப், 2 வைபர் அல்லது உங்களுக்கு தேவையான எந்த ஒரு செயலியையும் இரண்டாக உபயோகிக்க முடியும்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது போனில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளும் இந்த செயலியில் பட்டியலிட்டு காட்டப்படும்.
அடுத்து நீங்கள் எந்த செயலியை உங்களது போனில் இரண்டாக உபயோகிக்க நினைக்கிறீர்களோ, அந்த செயலியை மேலே காட்டப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர் கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் திரை ஒன்று தோன்றும்.
அதிலே, உதாரணமாக நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்கு உபயோகிக்க வேண்டுமென்றால், வாட்ஸ்அப் ஐகன்-இல் சிறிது நேரம் அழுத்தி பிடியுங்கள்.
அடுத்து அந்த ஐகான்-ஐ கீழே கொண்டு வந்து Create Shortcut என்று இருப்பதில் விடுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் போனின் மெனு-விற்கு சென்று பாருங்கள். அங்கே புதிதாக வாட்ஸ்அப் + என்ற பெயரில் இரண்டாவது வாட்ஸ்அப் செயலி நிறுவப்பட்டிருக்கும்.
இதே முறையை பயன்படுத்தி உங்களது போனில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளில் Copy-யை பெற முடியும்.
இந்த சிறப்பு அன்றொஇட் செயலியை கீழ் வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
அன்றொஇட் சிறப்பு செயலி
ஆகவே இனி உங்களுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனில் 2 வாட்ஸ் அப் ,2 வைபர், 2 பேஸ்புக் என்று உங்களுக்கு தேவையான அனைத்து செயலிகளையும் இரண்டாக உபயோகித்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
அன்றொஇட் போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் இரண்டாக உபயோகிக்க வேண்டுமா? இனி 2 வாட்ஸ்அப், 2 வைபர், 2 பேஸ்புக்


