பெண்களின் ஸ்மார்ட் போனுக்கான செயலி - தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று பெயருடன் தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக, தமது போனுக்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்களை குறிப்பிடலாம்.

சில சமயம் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று நினைக்கும் அளவிற்கு இந்த தேவையில்லா அழைப்புக்களின் தொல்லை இருக்கும். அதிலும் பெண்களின் ஸ்மார்ட் போன் களுக்கு இந்த தொல்லை அதிகளவில் இருக்கும்.

இவ்வாறு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை கண்டறியும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.


ஆம் நண்பர்களே.. இது முடியும். உங்களது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை சரியாக பிடித்துக்கொள்ள உதவுகிறது இலக்கங்களை கண்டறியும் செயலி.

எப்படி ஒரு செயலியால் அழைப்பவரின் இலக்கத்தை சரியாக கூற முடியும் என்று ஆச்சிரியமாக உள்ளதா?

வாருங்கள்..! இந்த செயலி எவ்வாறு செயற்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பிட்ட இந்த செயலியை ஒருவர் தனது ஸ்மார்ட் போனில் நிறுவும் போது, அவருடைய காண்டக்ட் லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து இலக்கங்களும் குறிப்பிட்ட பெயர் விபரங்களுடன் இந்த செயலியின் தரவு சேமிக்கும் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. ஆகவே இந்த செயலியை பல லட்ச்சக்கணக்கான பயனர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்துவதால், எமது போனுக்கு தெரியாத இலக்கமொன்றில் அழைப்பு வரும் போது, குறித்த அழைப்பு யாருடையது என்பதை சரியாக காட்டுகிறது.

சரி.. இந்த செயலியை எப்படி உங்களது போனுக்கு நிறுவி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் அழைப்புக்களை இனம்காண கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.


இப்போது உங்களது போன் கால் லோக் ஸ்கேன் செய்யப்பட்டு அங்கே தெரியாத இலக்கத்தில் இருந்து வந்த அழைப்புக்கள் யாருடையது என்பதை காட்டும்.


அது மட்டுமல்லாது உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்களை Block செய்யவும் இந்த செயலி உதவுகிறது.

அத்தோடு உங்களுக்கு வரும் அழைப்பானது ஏற்கனவே பலருக்கு வந்து அவர்கள் அந்த அழைப்பை ப்லோக் செய்து இருந்தால், அதையும் உங்களுக்கு காட்டுகிறது இந்த செயலி.

ஏற்கனவே தெரியாத ஏதேனும் ஒரு இலக்கத்தில் இருந்து உள்வந்த அழைப்பின் இலக்கத்தை சரியாக குறித்து வைத்து கொண்டு இந்த செயலிக்கு சென்று குறித்த இலக்கம் யாருடையது என்பதையும் தேடிப்பார்க்க முடியும்.

இந்த செயலியில் இலவச பதிப்பானது, கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்கும். ஆனால் இலவச பதிப்பில் அதிகபடியான விளம்பரங்களும் அதே போல் சில குறிப்பிட்ட வசதிகளுமே காணப்படுகின்றன.

ஆகவே இந்த செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக உங்களது போனுக்கு பெற்று கொள்வது கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 10' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)