வைபர் ஸ்கைப் போன்ற செயலிகளில் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் போது வீடியோவை ரெகார்டிங் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாலர்களின் மத்தியில், தங்களுடைய ஸ்மார்ட் போன் மூலம் செய்து கொள்ள வேண்டிய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் காணப்படும் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் தேவைக்கேற்றவாறு ஸ்மார்ட் போன்களுக்கான செயலிகளை உருவாக்கும் டிவலபர்களும் புதுப்புது செயலிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் எமது தளத்திலும் கூட ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கான சிறப்பு செயலிகள் பற்றி ஏற்கனவே பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன.

அவற்றிலே ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் வித்தியாசமான தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அறிமுகமாகிய சில செயலிகளை கீழே வரிசைப்படுத்துகிறேன்.

ஸ்க்ரீன்-ஐ அன்லாக் செய்யாமல் வீடியோ ரெகார்டிங் செய்வதும் போட்டோ எடுப்பதும் எப்படி?

ஆண்ராயிடு போனை ஸ்பை கேமரா ஆக மாற்றி கணணிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

கணித கேள்விகளுக்கு விடை கூறும் அன்றொஇட் செயலி


சரி.. அந்த வகையில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மற்றுமொரு தேவை தான், தங்களுடைய போனில் வைபர் அல்லது ஸ்கைப் மூலம் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் போது குறித்த வீடியோ அழைப்பை ரெகார்ட் செய்து கொள்ள வேண்டும் என்பது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி உதவுகிறது.
இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனில் ஆரம்பியுங்கள்.

இப்போது நீங்கள் வைபர் அல்லது ஸ்கைப் மூலம் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் போது இந்த செயலியை பயன்படுத்தி குறிப்பிட்ட வீடியோ அழைப்பை ரெகார்டிங் செய்து கொள்ள முடியும்.

இந்த அருமையான ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு
குறிப்பு

இப்படியும் ஒரு வசதி ஆன்ராயிடு போனில் காணப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துவதட்காவே இந்த பதிவை எழுதி உள்ளேன். ஆகவே வீடியோ அழைப்புகளின் போது இந்த செயலியை தவறான முறையில்  வேண்டாம்.