ஆன்ராயிடு போனுக்கு வாட்ஸ்அப் ப்ளஸ் செயலியை பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த ஒரு மெசெஞ்சர் செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது. ஆனால் இன்றைய பதிவு வாட்ஸ்அப் சம்மந்தமானது இல்லை, வாட்ஸ் அப்-இன் சகோதரரான வாட்ஸ்அப் ப்ளஸ் சம்மந்தப்பட்டது.

வாட்ஸ்அப் ப்ளஸ் சம்மந்தமாக ஸ்மார்ட் போன் பாவனையாலர்களுக்கு மத்தியில் இருக்கும் பொதுவான கேள்வியாக, வாட்ஸ் அப் ப்ளஸ்-ஐ எமது ஸ்மார்ட் போனில் உபயோகிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வியை கூறலாம்.


வாட்ஸ்அப் ப்லஸ்-ஐ எமது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கலாமா? இது பாதுகாப்பானதா?

அதிகாரபூர்வ வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கும் கருத்தின் படி வாட்ஸ்அப் ப்லஸ் செயலிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் வாட்ஸ்அப் ப்லஸ் பாதுகாப்பானது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் வாட்ஸ்அப்-ஐ சாதாரண Chat-க்கு மட்டும் உபயோகிக்கிறீர்கள் என்றால், எந்த விதமான பயமும் இல்லாமல் வாட்ஸ்அப் ப்லஸ் செயலியை உபயோகிக்கலாம்.

அப்படியில்லாமல் பாதுகாப்பு மிக்க தனிப்பட்ட விடயங்களை நீங்கள் வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்றால், வாட்ஸ்அப் ப்லஸ் உபயோகிப்பது பாதுகாப்பானது இல்லை.

ஆகவே வாட்ஸ் அப் ப்ளஸ்-ஐ நீங்கள் உங்களது ஆன்ராயிடு போனில் உபயோகிக்க வேண்டும் என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று உங்களது போனுக்கான வாட்ஸ்அப் ப்ளஸ்-ஐ பெற்று கொள்ளுங்கள்.
எமது தளத்தில் ஏற்கனவே வாட்ஸ்அப் ப்ளஸ் என்றால் என்ன? இதன் பயன்கள் என்ன? வாட்ஸ் அப் இல் ப்லோக் ஆகாமல் வாட்ஸ்அப் ப்ளஸ்-ஐ எப்படி எமது போனில் பயன்படுத்துவது என்பது  பற்றிய சிறப்பு பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே உங்கள் பார்வைக்காக தருகிறேன்.

வாட்ஸ்அப் ப்லஸ் என்றால் என்ன?

வாட்ஸ்அப் ப்லஸ் என்பது அதிகாரபூர்வ வாட்ஸ்அப் தளத்தின் செயலி இல்லை. இது ஒரு மூன்றாம் நபர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியாகும். ஆனால் இந்த செயலி வாட்ஸ்அப் உபயோகிக்கும் அதே லைசன்ஸ்-சயே உபயோகிக்கிறது. அத்துடன் வாட்ஸ்அப் எமக்கு வழங்கும் வசதிகளை விட சில சிறந்த வசதிகளை எமக்கு வாட்ஸ்அப் ப்லஸ் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாட்ஸ்அப் ப்ளஸ் தரும் வசதிகள் என்ன? மற்றும் வாட்ஸ்அப் ப்ளஸ்-ஐ உபயோகிப்பது எப்படி என்ற விபரங்களை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் ப்லஸ் என்றால் என்ன? அதை உபயோகிப்பது எப்படி? (சிறப்பு பார்வை)

ஆகவே உங்களது ஆன்ராயிடு போனுக்கு  வாட்ஸ்அப் ப்ளஸ் தேவை என்று நினைத்தால், கீழ்குறிப்பிட்டுள்ள முறை மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 04' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)