ஸ்மார்ட் போன்களுக்கான இன்டர்நெட் மற்றும் வைபை சம்மந்தாமான பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான மற்றுமொரு பயனுள்ள வைபை பதிவுடன் வந்திருக்கிறேன்.
ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இலவச வைபை இணைப்புக்களை தேடி பல்வேறு வகையான செயலிகளை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலான செயலிகள், தமது வேலையை சரிவர செய்ய தவறுகின்றன.
ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது, இலவச வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல், மற்றும் குறித்த நெட்வொர்க் இருக்கும் இடம் என்பற்றை துல்லியமாக காட்டக்கூடிய ஒரு செயலி பற்றியது.
அதாவது குறித்த ஒரு இடம் அல்லது ஏரியா ஒன்றிலே இருக்கும் அனைத்து வைபை நெட்வொர்க்-களையும் எமது போனில் இருக்கும் லோகேசன் வசதி மூலமாக ஸ்கேன் செய்து, அவற்றிலே இலவசமாக கிடைக்க கூடிய வைபை நெட்வொர்க்-களை எமக்கு காட்டி தருகிறது.
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கமாக பார்ப்போம்.
முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் இலவச வைபை நெட்வொர்க்-ஐ காட்டக்கூடிய செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று லோகேசன் செர்வீஸ்-ஐ ஆரம்பித்து விடுங்கள்.
அடுத்து உங்களது போனில் நிறுவிய செயலியை ஆரம்பியுங்கள்.
அடுத்து, வைபை என்று இருப்பதில் காணப்படும் இடங்களை தேடுவதற்கான ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த ஏரியா-வில் இருக்கும் அனைத்து வைபை நெட்வொர்க்-களும் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களுக்கு காட்டப்படும்.
இவற்றிலே இலவச வைபை நெட்வொர்க்-கள் காணப்படுமேயானால், கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இந்த செயலியில் காணப்படும் ப்ரீ வைபை எனும் மெனு-வில் காட்டப்படும்.
ஆகவே எமது ஏரியா-வில் காணப்படும் இலவச வைபை நெட்வொர்க்-களை சரியான கடவுச்சொல்லுடன் துல்லியமாக காட்டக்கூடிய இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
இலவச வைபை நெட்வொர்க்-களை கண்டுபிடிக்கும் செயலி
ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் இந்த செயலி பயனுள்ள ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், இந்த செயலி மூலம் எமது போனில் அதிகளவான விளம்பரங்கள் தோன்றுவது ஒரு பெரிய குறைபாடாகவே பார்க்கபடுகிறது.
Tech in Tamil
Android
Tips and Tricks
போனில் இருக்கும் லோகேசன் சேவை மூலம் எமது ஏரியா-வில் இருக்கும் அனைத்து இலவச வைபை நெட்வொர்க்-களையும் கண்டு பிடிப்பது எப்படி?





