2G இன்டர்நெட் இணைப்பில் 3G வேகத்தை பெற்றுக் கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்கள் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை, தமது இன்டர்நெட் இணைப்பு மிகவும் மெதுவாக செயற்படுவது. அதிலும் 2G இன்டர்நெட் பேக்-ஐ பயன்படுத்துவோரின் இன்டர்நெட் இணைப்பு மிகவும் மெதுவானதாக இருப்பது சாதாரண விடயம் ஆகும்.

எமது தளத்திலும் கணணி ஸ்மார்ட் போன் என்று இரண்டிலும் முடியுமான அளவு இன்டர்நெட் வேகத்தை எப்படியெல்லாம் அதிகரித்து கொள்ள முடியும் என்ற பதிவுகள் எழுதப்பட்டன. அவற்றிலே சில சிறந்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து கொள்ள முடியும்.

அதிவேக DNS மற்றும் IPv6 மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

CMD மூலம் இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்வது எப்படி?


இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ளும் பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று 2G இன்டர்நெட் இணைப்புக்களின் ப்ரொவ்சிங் வேகத்தை அதிகரித்து கொள்ள மற்றுமொரு உபாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

நீங்கள் 3G வசதி கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்றில் 2G டேட்டா பேக்-ஐ பயன்படுத்தி இன்டர்நெட் உபயோகிக்கிறீர்கள் என்றால், கீழ்வரும் சிம்பலான முறையை பயன்படுத்தி உங்களது 2G டேட்டா பேக்-இல் இருந்து 3G உடைய இன்டர்நெட்வேகத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு போனில் இன்டர்நெட் வேகத்தை அளவிடும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து உங்களுடைய போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே More Network என்பதை கிளிக் செய்து, Mobile Network என்பதை தெரிவு செய்யுங்கள்.


(இந்த செட்டிங்க்ஸ் ஒவ்வொரு போனுக்கும் வேறுபடும். ஆகவே உங்களது போனில் இருக்கும் மொபைல் நெட்வொர்க் செட்டிங்க்ஸ்-ஐ ஆரம்பியுங்கள்.)


அதிலே, உங்களது சிம்முக்கான Network Mode-ஐ கிளிக் செய்யுங்கள்.


அதிலே Network Mode-ஐ WCDMA என்று மாற்றி விடுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களது 3G போன் மூலம்,  2G இன்டர்நெட் பேக்-இல் இருந்து 3G இன்டர்நெட் ப்ரொவ்சிங் வேகத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே இந்த உபாயம் மூலம், உங்களது ஸ்மார்ட் போன் இன்டர்நெட் வேகம் அதிகரித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள, இந்த உபாயத்தை உங்களது போனில் செய்ய முன்னரும், செய்து முடித்த பின்னரும் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்ராயிடு சிறப்பு செயலி மூலம் போன் இன்டர்நெட் வேகத்தை பரீட்சித்து பார்த்து கொள்ளுங்கள்.

இன்டர்நெட் வேகத்தை அளக்கும் ஆன்ராயிடு செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறிப்பு

இந்த உபாயம் உங்களது போனில் வேலை செய்ய வேண்டும் என்றால், உங்களது ஏரியா-வில் குறித்த மொபைல் நெட்வொர்க்-குக்கான 3G வசதி இருக்க வேண்டும்.

இந்த உபாயம் மூலம், உங்களுடைய போனில் போர்வ்சிங் வேகம் மட்டுமே அதிகரிக்கப்படும். டவுன்லோட் வேகம் 2G-யிலேயே காணப்படும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.