இரண்டு இன்டர்நெட் இணைப்புக்களை ஒன்றாக இணைத்து உங்களது இன்டர்நெட் வேகத்தை இரு மடங்காக அதிகரிப்பது எப்படி?

இன்டர்நெட் சம்மந்தாமான மற்றுமொரு முக்கியமான பதிவு ஒன்றுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். அதாவது எமது கணனியில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்டர்நெட் இணைப்புக்களை ஒரேயடியாக பயன்படுத்துவதன் மூலம், இன்டர்நெட் ப்ரொவ்சிங் மற்றும் டவுன்லோட் வேகத்தை இரு மடங்கு அல்லது பல மடங்காக அதிகரித்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

அதாவது உங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட இணைய இணைப்புக்கள் இருக்கின்றது என்றால், நான் கூறும் முறையை பின்பற்றி உங்களது இணைய வேகத்தை இரண்டு, மூன்று அல்லது நான்கு மடங்காக கூட அதிகரித்து கொள்ள முடியும்.

எப்படி என்றால், உங்களுடைய ஸ்மார்ட் போனில் உபயோகிக்கும் ஒரு இன்டர்நெட் இணைப்பு இருக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள். அதே போல், கணனியில் வைபை மூலம் ஒரு இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது, அதே போல் 3G அல்லது 4G டொன்கல் ஒன்றில் மூலமும் இன்டர்நெட் உடன் இணையும் வசதி இருக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள்.

ஆகவே இவை மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரு இன்டர்நெட் இணைப்பை உருவாக்குவது எப்படி என்பதே இன்றைய பதிவாகும்.


அப்படியென்றால், குறித்த 3 இன்டர்நெட் இணைப்புக்களும் ஒன்றாக இணையும் போது, உங்களுடைய இன்டர்நெட் வேகம் 3 மடங்காக அதிகரிக்கப்படும்.

இந்த செயன்முறையை மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி உங்களது விண்டோஸ் கணணி, ஆன்ராயிடு மற்றும் ஐபோன் என்று அனைத்து டிவைஸ்களில் இருந்தும் செய்து கொள்வது எப்படி என்ற பதிவு ஒன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.

பல இன்டர்நெட் இணைப்புக்களை இணைத்து ஒரு இன்டர்நெட் இணைப்பு உருவாக்குவது எப்படி?

ஆனால் இன்று இந்த முறையை எந்த விதமான ஒரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் உங்களது விண்டோஸ் கணனியில் இருந்து செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

உதாரணமாக மொபைல் டேட்டா-வையும் வைபை நெட்வொர்க் ஒன்றையும் எப்படி ஒன்றாக இணைப்பது என்று பார்ப்போம்.

முதலாவாதாக நீங்கள் ஒன்றாக இணைக்க நினைக்கும் இரண்டு இன்டர்நெட் இணைப்புக்களையும் கணனியில் இணைத்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது கணனியில் Control Panel-க்கு சென்று, அங்கே Network & Sharing Center என்று இருப்பதை திறவுங்கள்.


அங்கே உங்களது இரண்டு இன்டர்நெட் இணைப்புக்களும் காட்டப்படும்.


அங்கே காணப்படும் இன்டர்நெட் இணைப்புக்களில் முதலாவதாக இருக்கும் இன்டர்நெட் இணைப்பை கிளிக் செய்து,
அதிலே Properties என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் திரையில் IPv4 என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் திரையில் Advanced என்பதை கிளிக் செய்து, metric என்று இருப்பதை மனுஅல் ஆக மாற்றி, 10 என்று வைத்து OK பட்டன்-ஐ கிளிக் செய்யுங்கள்.


அடுத்ததாக இதே செயன்முறையை இரண்டாவதாக இணைத்து இருக்கும் இன்டர்நெட் இணைப்பிலும் செய்து, metric அளவை 10 என்று வைத்து OK பட்டன்-ஐ அழுத்துங்கள்.

இந்த செயன்முறைகளை செய்து முடித்த பின்னர், இறுதியாக உங்களது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து விட்டு, குறித்த இரண்டு இன்டர்நெட் இணைப்புக்களையும் கணனியில் இணைத்து இணையுங்கள்.

இப்போது குறித்த இரண்டு இன்டர்நெட் இணைப்புக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு விட்டது. ஆகவே உங்களது இன்டர்நெட் வேகம் தற்போது இரண்டு அல்லது அதற்கும் மேலாக அதிகரிப்பட்டு விட்டது.