இந்தியாவில் இலவசமாக மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ள உதவும் 10 ஆன்ராயிடு செயலிகள்

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் ரீசார்ஜ் செய்தே கட்டுப்படியாகவில்லை என்ற வாசகத்தை அடிக்கடி சொல்லி நாம் கேட்டு இருப்போம். ஸ்மார்ட் போனும் இன்டர்நெட் இணைப்பும் இருந்தாலே போதும். நாம் போனில் செய்யும் ரீசார்ஜ் பஞ்சாய் பறந்து போகும். ஆகவே இன்றைய பதிவிலே இந்திய நாட்டிற்கு உட்பட்ட சிறந்த சில இலவச ரீசார்ஜ் செயலிகளை பரிந்துரைக்க போகிறேன்.

இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்ள செயலிகள் இருக்கின்றனவா என்று ஆச்சரியமாக கேட்கிறீர்களா? ஆம் நண்பர்களே எமது போனை இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்ள சில சிறந்த செயலிகள் காணப்படுகின்றன.


அவை எப்படி செயற்படுகின்றது என்றால், குறித்த செயலில் பரிந்துரைக்கும் செயலிகளை ஒரு சில நிமிடங்களுக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம், அல்லது குறித்த செயலியை எமது நண்பர்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் அல்லது வேறு ஏதேனும் குறித்த செயலியால் பரிந்துரைக்கப்படும் முறை மூலம் எமது போனை இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஆகவே எமது ரீசார்ஜ் பசியை தீர்த்து கொள்ள உதவும் சில சிறந்த இலவச ரீசார்ஜ் செயலிகளை பற்றி பார்ப்போம். அவை அனைத்துமே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் என்பதையும், அதே போல் இவை அனைத்தும் இந்திய நாட்டிற்கு உள்ளே மட்டுமே செயற்படும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

இதோ..! கீழே பரிந்துரைக்கப்பட்டிருக்கும் செயலிகளில், எதேனும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட செயலிகளை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து குறித்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, அங்கே கூறப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் படி செய்து உங்களது போனை இலவசமாக ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனுக்கான சிறந்த 10 இலவச ரீ சார்ஜ் செயலிகள்

டாஸ்க் பக்ஸ்
க்ரேப்ர்
ப்ரீ பீ ரீசார்ஜ்
எர்ன் டாக்டைம்
லடூ ரீசார்ஜ்
எம் சென்ட்
சேம்ப் கேஷ்
ப்ரீ கேஷ்
ரீசார்ஜ் அப் ட்ரைல்

இவை தவிர எமது தளத்தில் மொபோ ரீசார்ஜ் மூலம் எப்படி இலவசமாக உங்களது போனை ரீசார்ஜ் செய்து கொள்வது என்ற சிறப்பு பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது மொபைலை மொபோ ரீ சார்ஜ் மூலம் இலவசமாக ரீ-சார்ஜ் செய்து கொள்வது எப்படி?

மேலே நாம் பரிந்துரைத்த அனைத்து செயலிகளும் உங்களது ஆன்ராயிடு மூலம் இலவச ரீசார்ஜ்-களை வழங்ககூடியவைகளாகும். மேலும் இந்த அனைத்து செயலிகளும் இந்தியாவில் பெரும்பாலான மொபைல் நெட்வொர்க்-களுடன் இணைந்து செயட்படக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.