ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களை குறிப்பிட்டளவான ஒரு சில பணக்காரர்களின் கைகளில் மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், ஸ்மார்ட் போன் என்றாலே அதிகளவான விலை கொண்டதாக காணப்பட்டமையே. ஆனால் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் நியாயமான விலையில் சிறந்த வசதிகளுடனும் அறிமுகமாகுவதால், அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் இருப்பதை காணலாம்.
நியாயமான விலையில் அறிமுகமாகி கொண்டு இருந்த ஸ்மார்ட் போன்கள் சீனா நாட்டின் ஸ்மார்ட் போன் தயாரிப்புக்களால் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க துவங்கியது. உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் மீதான ஈடுபாடு இப்படி சென்றுகொண்டிருக்க இந்திய நாட்டில் நம்ப முடியாத விலையில் உலகின் அதிகுறைந்த விலையுடைய ஸ்மார்ட் போன் என்ற பெயருடன் ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ரிங்கிங் பெல் நிறுவனத்தின் ப்ரீடம் 251 எனப்படும் ஸ்மார்ட் போன் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட் போன் குறித்து எமது தளத்திலும் பல்வேறு பதிவுகள் எழுதப்பட்டன. ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் தொடர்பான சுவாரஸ்யமான விடயங்களை கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிங் ஆகுமா? ரிங்கிங் பெல் நிறுவனத்தின் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்
இதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலே மற்றுமொரு ஸ்மார்ட் போன் அதிகுறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் Docoss X1 என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஸ்மார்ட் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் Docoss-இன் அதிகாரபூர்வ தலத்திற்கு சென்று நீங்களும் Docoss X1 போன் ஒன்றை முன்பதிவு செய்து கொல்ள முடியும்.
மேலும் SMS ஒன்றை அனுப்பி கூட இந்த புதிய ஸ்மார்ட் போனை உங்களால் முன்பதிவு செய்து கொள்ள முடியும். SMS அனுப்பும் முறை மற்றும் மேலதிக விபரங்களை குறித்த அதிகாரபூர்வ தலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
888 ரூபாய்க்கு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போன் தரும் வசதிகள் என்ன என்று பார்ப்போம்.
Dual-Core Cortex A7 1.2GHz ப்ரோசெசர்
ஆன்ராயிடு கிட்கட் இயங்குதளம்
4 இன்ச் திரை அளவு
1GB ரேம்
0.3MP முன்பக்க கேமரா
2.0MP பின்பக்க கேமரா
4GB இன்டெர்னல் மெமரி (32GB வரை அதிகரித்து கொள்ள முடியும்)
இரண்டு சிம்
2G, 3G மற்றும் வைபை வசதி
ஆகவே அதிகுறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போனை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால், இங்கே கிளிக் செய்து நேரடியாக அல்லது SMS மூலமாக முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும்.
மேலும் முன்பதிவு செய்த இரண்டு வாரங்களுக்குள் போன் டிலிவரி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கபடிக்கிறது.
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் முன்பதிவின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, Docoss X1 ஸ்மார்ட் போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், போன் டிலிவரி செய்யப்படும் போது பணம் செலுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது Docoss நிறுவனம்.
Tech in Tamil
Tech News
இந்திய விலையில் வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்
