இந்தியாவிற்கான கூகுள் லைவ் டிராபிக் சேவை புதிய பல வசதிகளுடன்..

இணையத்தின் ஜாம்பவானாக கருதப்படும் கூகுள் நிறுவனம், தொழிநுட்ப உலகில் அடிக்கடி புதிய பல புரட்சிகளை மேற்கொண்டு வருவது நாம் யாவரும் அறிந்த விடயமே. இதற்கு உதாரணமாக கூகுளின் பல்வேறு விதமான புதிய முயற்சிகளை குறிப்பிடலாம். அண்மையில் எமது தளத்திலும் கூட கூகுளின் காற்றின் மூலமான  இன்டர்நெட் திட்டம் பற்றி பதிவொன்று எழுதப்பட்டது. இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் அறிமுகப்படுத்தும் 5G இன்டர்நெட் காற்றின் மூலம் செயற்படுவதோடு 4G தொழினுட்பத்தை விட 40 மடங்கு வேகமானதாக இருக்கும்.

இவ்வாறு மனித தேவைகளை சாமர்த்தியமான முறையில் அணுகும் கூகுள் நிறுவனம், கடந்த வருடத்தில் முதன் முதலாக கூகுள் லைவ் டிராபிக் எனப்படும் சேவையை கூகுள் மேப் ஊடாக அறிமுகப்படுத்தி இருந்தது.


இந்த வசதி மூலம் குறித்த ஒரு இடத்தில் காணப்படும் வாகன நெரிசலை மிகத்துல்லியமாக தெரிந்து கொண்டு அதட்கேட்ப எமது பயணத்தை திட்டமிட்டு கொள்ள கூடியதாய் இருந்தது. ஆரம்பத்தில் இந்த சேவை அமெரிக்க நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும், தற்போது இந்த சேவையை உலகம் முழுதும் விஸ்தரிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

அந்த வகையில் இந்திய நாட்டிற்கான கூகுள் லைவ் டிராபிக் சேவையை தற்போது விஸ்தரிக்க தொடங்கி உள்ளது கூகுள் நிறுவனம்.

ஆகவே தற்போது எம்மால் கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி எமது இடத்திற்கு அருகிலோ அல்லது தொலைவிலோ இருக்கும் வாகன நெரிசலை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்ட ஒரு வழியினூடாக எமது பயணத்தை வாகன நெரிசலுக்கு மத்தியில் எவ்வளவு நேரத்தில் கடக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல் குறித்த பாதையொன்றில் ஏதேனும் சீர்திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றதா? குறித்த பாதை மூடப்பட்டுள்ளதா? விபத்துக்கள் ஏதேனும் இடம் பெற்றுள்ளதா? குறித்த பாதையில் காணப்படும் டிராபிக்-இன் அளவு என்ன? (அதாவது சாதாரண வாகன நெரிசலா அல்லது அதிகபடியான வாகன நெரிசலா) என்பதையெல்லாம் மிகத்தெளிவாக எமக்கு காட்டுகிறது.

ஆகவே இந்த அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள உங்களது ஸ்மார்ட் போனின் கூகுள் மேப்-ஐ அப்டேட் செய்திடுங்கள்.

அடுத்து மேப் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று அதிலே டிராபிக் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


பரிந்துரைக்கப்படும் பதிவு

 இப்போது உங்களால் குறித்த இடம் ஒன்றினது நேரடி வாகன நெரிசலை தெரிந்து கொள்ள முடியும். கூகுள் மேப்-இல் குறித்த பாதை பச்சை நிறத்தில் காட்டப்பட்டிருந்தால் வாகன நெரிசல் இல்லை என்றும் ஆரஞ்சு நிறத்தில் காட்டப்பட்டிருந்தால் ஓரளவு வாகன நெரிசல் இருக்கிறது என்று சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருந்தால் அதிகபடியான வாகன நெரிசல் இருக்கின்றது என்றும் அர்த்தம் ஆகும்.