எமது போனில் ஏதேனும் துப்பறியும் செயலிகள் (ஸ்பை ஆப்ஸ்) இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்மார்ட் போன்கள் என்பது மனிதனின் தேவைகளை இலகு படுத்துவதட்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் அழைப்புக்களை மேட்கொள்வதட்கும் குறும் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கும் என்பதோடு நின்று விடாமல் மனிதனின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்துள்ளன.

இதற்கு சிறந்த உதாரணங்களாக ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் எழுதப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் சில பதிவுகளை எடுத்து காட்டலாம்.

ஆண்ராயிடு போனை ஸ்பை கேமரா ஆக மாற்றி கணணிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?


ஆகவே இன்று வரும் ஸ்மார்ட் போன்கள் ஒரு போன் ஆக மட்டுமே இருந்து விடாமல்  பல்வேறு பயனுள்ள வசதிகளை தரக்கூடிய ஸ்மார்ட் டிவைஸ் ஆக மாறி விட்டது.

இவ்வாறான ஸ்மார்ட் போன்கள் மூலம் பல்வேறு நன்மையான விடயங்கள் எமக்கு கிடைக்கிற அதே சந்தர்ப்பத்தில் தீமையான பல விடயங்களும் வந்து சேர தவறவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பதிவான 'ஒருவரின் போன் கேமரா-வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பது எப்படி?' என்ற பதிவை கூறலாம்.

இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருப்பது எவ்வளவு பயனுள்ளதோ, அதே அளவு ஆபத்தும் சூழ்ந்தது. ஆகவே எமக்கு தெரியாமலேயே எமது ஸ்மார்ட் போனை யாரேனும் வேவு பார்த்து கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

அதனால் ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருக்கும் நாம், எமது ஸ்மார்ட் போனில் ஏதேனும் தேவையில்லாத வேவு பார்க்கும் செயலிகள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் ஏதேனும் வேவு பார்க்கும் செயலிகள் நிருவப்பட்டிருக்கிறதா என்பதை மிக இலகுவாக தெரிந்து கொள்ள கீழ்வரும் ஆன்ராயிடு செயலி எமக்கு உதவுகிறது.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ஸ்கேன் என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும் சிஸ்டம் பைல் உட்பட ஸ்கேன் செய்யப்படும்.

ஸ்கேன் முடிவடைந்த பின்னர், உங்களது போனில் எதாவது வேவு பார்க்க கூடிய செயலிகள் காணப்படுகின்றதா என்ற விபரங்களை காட்டும்.

உங்களது போனில் ஏதேனும் வேவு பார்க்கும் செயலிகள் காணப்படுமேயானால், கீழே படத்தில் நீல நிறத்தில் குறித்து காட்டப்பட்டிருக்கும் பெட்டியில் ஸ்பை செயலி இருப்பதாக காட்டும்.


அப்படியில்லாமல் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டப்பட்டிருக்கும் பெட்டியில் காட்டப்படும் செயலிகள் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்களது போனில் லோகேசன் சர்வீஸ் சேவையில் இருந்தால் கூட உங்களது போன் வேவு பார்ப்பதாக கருதப்பட்டு இந்த 'வார்னிங்' மெனு-வுக்கு கீழ் காட்டப்படும்.

மேலும் இந்த வார்னிங்' மெனு-வில் காணப்படும் செயலிகளில் விபரத்தை குறித்த செயலியை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.


ஆகவே மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக கருதப்படும் இந்த ஸ்பை ஆப்ஸ்-களை துப்பறியும் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஸ்பை ஆப்ஸ்-களை துப்பறியும் செயலி

இந்த செயலியை உங்களது போனில் ஒரு முறை நிறுவி, அனைத்து செயலிகளையும் ஸ்கேன் செய்து முடித்து விட்டு, உங்களது போனில் எந்த விதமான துப்பறியும் செயலிகளும்  இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த செயலியை நீக்கி விடக்கூட முடியும்.

ஆனால் கட்டாயமாக இந்த செயலி மூலம் உங்களது போனை ஒரு முறையேனும் ஸ்கேன் செய்து விடுங்கள். ஏனெனில் ஆபத்து எந்த செயலியால் வேண்டுமானாலும் வரலாம் அல்லவா..!!