ஆன்ராயிடு செயலிகளை ஹைபர்நெட் செய்வதன் மூலம் பேட்டரி சார்ஜ்-ஐ மிகச்சிறந்த முறையில் சேமிப்பது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக தமது போனில் அதிக நேரம் பேட்டரி சார்ஜ் தங்கி இல்லாமல் இருப்பதை கூறலாம். ஆன்ராயிடு போன் பாவனையாளர்கள் என்று கூறுவதை விட ஸ்மார்ட் போன் பாவனையாளர்களில் பெருமாலானோர் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணம், எமது ஸ்மார்ட் போனில் அதிகபடியான செயலிகள் காணப்படுவதும் அவற்றில் பெரும்பாலான செயலிகள் நாம் போனை பயன்படுத்தாத சந்தர்ப்பத்திலும் கூட பின்புலத்தில் இருந்து செயற்பட்டு கொண்டு இருப்பதை கூறலாம்.


ஆகவே இவ்வாறு ஒவ்வொரு செயலிகளும் தமது விருப்பம் போல் எமது போன் பேட்டரி சார்ஜ்-ஐ வீணடித்துகொண்டிருப்பதை தடுக்கும் விதமாக கூகுள் ப்லே ஸ்டோரில் பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான செயலிகள் தமது வேலையை சரி வர செய்ய தவறுகின்றன.

அதானால் இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு போன் பேட்டரி சார்ஜ்-ஐ மிகச்சிறந்த முறையில் சேமிக்க உதவும் ஒரு செயலியை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

இந்த செயலியை ரூட் செய்த, மற்றும் ரூட் செய்யப்படாத ஆன்ராயிடு போன் என இரண்டிலும் பயன்படுத்த முடியும். ஆனால் ரூட் செய்யப்பட்ட ஆன்ராயிடு போன் என்றால், இந்த செயலியில் உச்சகட்ட பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பேட்டரி வாழ்க்கையை சேமிக்க கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.



அடுத்து இந்த செயலியின் மேலே வலது மூலையில் காணப்படும் + ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.



அவற்றிலே நீல நிறத்தில் சிறிய மார்க் ஒன்று காணப்படும் செயலிகள் தான் உங்களது போனில் அதிகளவான பேட்டரி சார்க்-ஐ வீணடிக்கும் செயலிகள்.

அவை அனைத்தையும் தெரிவு செய்து, கீழே மூலையில் காணப்படும் 'சரி' ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போது இந்த அனைத்து செயலிகளும் உங்களது போனில் பின்புலத்தில் இருந்து செயற்படுவது தடுக்கப்படும்.

மேலும் இந்த செயலியின்  செட்டிங்க்ஸ் பகுதியில், குறித்த செயலியை கட்டுப்படுத்துவதட்கான சிறந்த பல வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே உங்களது ஆன்ராயிடு போன் பேட்டரி சார்ஜ்-ஐ சேமிக்க உதவும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு பேட்டரி வாழ்க்கையை சேமிக்கும் செயலி

ஏற்கனவே நான் மேலே குறிப்பிட்டது போல, ரூட் செய்த ஆன்ராயிடு போன்களில் இந்த செயலி மிகச்சிறப்பான முறையில் பேட்டரி வாழ்க்கையை சேமிக்கிறது. ஆகவே உங்களது போனை ரூட் செய்து கொள்ள வேண்டுமென்றால், எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ரூட் பற்றி எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்னு வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

5 மில்லியனுக்கும் மேலான ஆன்ராயிடு டிவைஸ்களில் பேட்டரி சார்ஜ்-ஐ சேமித்து கொள்ள உதவி வரும் இந்த செயலி, உங்களது போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.