வைபர் மெசேஜ் ஒன்றை கடவுச்சொல் ஒன்றின் மூலம் மறைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலிகளில் ஒன்று தான் வைபர். தனக்கென கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வைபர், உலகம் முழுதிலும் உள்ள எமது உறவுகளுடன் மிக இலகுவாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களின் மூலம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

இவ்வாறு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் நம்பகத்தன்மையை கொண்டுள்ள வைபர் செயலி, தனது பயனர்களுக்காக அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது நாம் யாவரும் அறிந்த விடயமே.


அந்த வகையில் தற்போது வைபரில் மிகச்சிறந்த சில வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது எமது செட் மெசேஜ்-களை பாதுக்காக்கும் விதமாக என்க்ரிப்சன் வசதியையும் அதே போல செட் மெசேஜ்-களை கடவுச்சொல் ஒன்றின் மூலம் பாதுகாக்கும் வசதி மற்றும் செட் மெசேஜ்-ஐ மறைக்கும் வசதி என்று சில அத்தியவாசியமான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வசதிகளை எமது வைபர்-இல் பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த அனைத்து வசதிகளையும் உங்களது வைபர் கணக்கில் இப்போதே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கான வைபர் செயலியை கீலே தறப்பற்றிக்கும் இணைப்பு மூலம் அப்- டேட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது குறித்த ஒருவரின் வைபர் செட்-ஐ மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

நீங்கள் மறைக்க நினைக்கும் குறித்த செட் மெசேஜ்-ஐ திறவுங்கள். அதிலே மேலே வலது மூலையில் காணப்படும் செட்டிங்க்ஸ் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.

அதிலே இறுதியாக இருக்கும் Hide this Char என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த செட்-ஐ மறைக்க முடியும்.


அடுத்து தோன்றும் திரையில் உங்களது செட்-ஐ கடவுச்சொல் ஒன்றின் மூலம் பாதுகாத்து கொள்ள கூட முடியும்.


மறைத்த வைபர் செட்-ஐ மறுபடியும் பார்ப்பது எப்படி?

நீங்கள் மறைத்த வைபர் மெசேஜ்-களை பார்க்க வேண்டும் என்றால், உங்களது வைபர் செயலியின் சர்ச் (Search) பார்-இல் குறித்த கடவுச்சொல்லை டைப் செய்து தேடுங்கள்.

இப்போது நீங்கள் மறைத்த அனைத்து வைபர் மெசேஜ்-களையும் பார்க்க கூடியதாய் இருக்கும்.

ஆகவே இந்த பயனுள்ள வசதிகளை உங்களது வைபர் கணக்கில் பெற்றுக்கொள்ள கீழே தரப்பட்டிருக்கும் ஆன்ராயிடு ப்லே ஸ்டோர்/ ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர் லிங்க் மூலம் உங்களது வைபர் செயலியை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

வைபர் செயலி - ஆன்ராயிடு
வைபர் செயலி -ஐபோன்

இந்த பதிவை சமூக வலைத்தலங்களிநூடாக ஷேர் செய்து உங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.