டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் இதுவரை வெளியான தொழிநுட்ப திட்டங்களும் அதன் இன்றைய நிலையும்..

இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கே மிகவும் பரீட்சயமான ஒரு வார்த்தை தான் 'டிஜிட்டல் இந்தியா'.

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ற தொனிப்பொருள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் பல்வேறு தொழிநுட்ப சம்மந்தமான விடயங்கள் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ள. இவற்றிற்கு சான்றாக இந்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிட்டு காட்டலாம்.

உதாரணமாக இந்திய ரயில் நிலையகளில் கிடைக்க கூடிய இலவச வைபை முதல், இந்தியா நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக/ அல்லது மிகக்குறைந்த விலையில் இன்டர்நெட்-ஐ வழங்க வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கூகுள் லூன் திட்டம் வரை, பல்வேறு உதாரணங்களை முன்வைக்கலாம்.


இந்தியாவில் வெகு விரைவில் ஆரம்பிகப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கூகுள் லூன் திட்டம் பற்றி எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவை கீழே வளங்கப்ட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா முழுவதும் கூகுள் லூன் மூலம் இலவச இன்டர்நெட்

ஆகவே டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தையை குறி வைத்து தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றிலே ஒரு சில திட்டங்கள் எமக்கு நன்மையளிப்பது போன்று தென்பட்டாலும் அவற்றிலே இருக்கும் பின்விளைவுகளை பற்றி நாம் சிந்திப்பே இல்லை.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பேஸ்புக் இந்தியாவில் ஆரம்பிக்கவிருந்த ப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை குறிப்பிடலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த ப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு இந்திய இளைஞ்சர்கள் மற்றும் கல்வி மேதைகளின் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இந்திய அரசு பேஸ்புக்-இன் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு தற்காலிக தடையை விதித்துள்ளது.

பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு தடை விதித்தது இந்திய அரசு

இதற்கு அடுத்தபடியாக ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 251 ரூபாய் ப்ரீடம் ஸ்மார்ட் போன் விவகாரம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது முன்பதிவுகளை ஆரம்பித்தது.

ஆனால் இந்த ஸ்மார்ட் போன் முன்பதிவு செய்த தினத்தில் இருந்து 4 மாதங்களின் பின்னரே வாடிக்கையாளர்களை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியது.
இதை தொடர்ந்து ரிங்கிங் பெல் நிறுவனத்தின் உரிமையாளர், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்ப வழங்கி, ஸ்மார்ட் போன் டிலிவரி செய்யப்பட்ட பின்னரே பணம் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முற்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி கொடுத்தது ரிங்கிங் பெல் நிறுவனம்


டிஜிட்டல் இந்தியா திட்டம் இதோடு நின்றுவிடவில்லை.

இப்போது புதிதாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழே பல்வேறு மொபைல் இன்டர்நெட் நிறுவங்கள், நம்ப முடியாத அளவான இன்டர்நெட் சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளார்கள். இதற்கு உதாரணமாக அண்மையில் இணையத்தில் வெளியான, BSNL நிறுவனத்தின் 20GB அளவான இன்டர்நெட் டேட்டாவை வெறும் 50 ரூபாய்க்கு வழங்கவிருக்கும் செய்தியை குறிப்பிடலாம்.

20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு

BSNL-இன் 20GB இன்டர்நெட் டேட்டா சலுகை செய்தி இணையத்தில் கசியவிடப்பட முன்னரே, ரிலைன்ஸ் நிறுவனத்தின் 75GB அளவான 4G இன்டர்நெட் டேட்டா வெறும் 200 ரூபாய்க்கு வழங்கப்படவிருப்பதாக வந்த செய்தி பற்றி எமது தளத்திலும் எழுதப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

ரிலைன்ஸ் வழங்கும் 75GB அளவான 4G இன்டர்நெட் வெறும் 200 ரூபாய்க்கு

தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியுமே அதிகாரபூர்வமாக வெளிவர முன்னர், பேஸ்புக்-இல் வெளியாகி விடுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகமாகவிருப்பதாக மேலே தெரிவுக்கப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் அதிகாரபூர்வமாக வெளியாக முன்னர், பேஸ்புக் மூலம் தான் வெளியாகி இருந்தது.

இவை அனைத்துமே உண்மையா? இல்ல நம்மள நாமே வதந்திகள் மூலம் ஏமாற்றி கொள்கிறோமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!