அதுமட்டுமில்லாமல், குறித்த கணனியில் நடப்பவற்றை VLC ப்ளேயர் மூலம் லைவ் டெலிகாஸ்ட் செய்வது எப்படி? வேறு ஒரு கணனியில் இருக்கும் உலாவி ஒன்றின் மூலம் லைவ் டெலிகாஸ்ட் செய்வது எப்படி? ஆன்ராயிடு போன் மூலம், குறித்த கணனியில் நடப்பவற்றை தெரிந்து கொள்வது எப்படி என்று நீங்கள் எதிர்பார்க்காத வசதிகளை தரும் ஒரு சிறந்த மொனிடரிங் மென்பொருள் பற்றி பார்ப்போம்.
ஆகவே நீங்கள் யாருடைய கணணியையாவது மொனிடர் செய்ய நினைக்கிறீர்கள் என்றால், இனி நீங்கள் மிக இலகுவாக குறித்த நபருக்கு தெரியாமல் அவருடைய கணனியில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த உபாயத்தின் மூலம், ஒரு கணணியை பல்வேறு விதத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆகவே அவற்றில் சில சிறந்த முறைகளை மட்டும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் மொனிடரிங் மென்பொருளை பெற்றுக்கொண்டு, நீங்கள் கண்காணிக்க நினைக்கும் குறித்த கணனியில் நிறுவுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளை குறித்த கணனியில் ஆரம்பியுங்கள்.
அதிலே Add என்பதை கிளிக் செய்து, 'லோகல் கேமரா' என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Desktop என்பதை தெரிவு Display1 என்பதையும் தெரிவு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த கணனியின் டிஸ்ப்ளே-யில் நடப்பவை அனைத்தும் லைவ் டெலிகாஸ்ட் ஆக ஆரம்பிக்கும்.
குறிப்பு
Local Device என்பதை தெரிவு செய்வதன் மூலம், குறித்த கணனியில் வெப் கேமரா இருக்குமேயானால், அதையும் கணணி பாவனையாளருக்கு தெரியாமல் ON செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, Web Settings என்பதை கிளிக் செய்து, அங்கே குறித்த கணணியை மொனிடர் செய்வதற்கான இலவச கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.
அடுத்து அங்கே காணப்படும் கேமரா ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள். அங்கே நீங்கள் குறித்த கணனியில் உருவாக்கிய டிஸ்ப்ளே கேமரா காட்டப்படும்.
அதை கிளிக் செய்வதன் மூலம், குறித்த கணனியில் நடப்பவற்றை நீங்கள் வேறு ஒரு இடத்தில் இருந்தபடியே பார்த்து கொள்ள முடியும்.
ஆகவே இந்த அதிசக்தி வாய்ந்த மொனிடரிங் மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
மேலும் இந்த ஸ்பை மென்பொருள் மூலம், குறித்த கணணியை VLC ப்ளேயர் மூலம், ஆன்ராயிடு போன் மூலம், தனிப்பட்ட IP முகவரிகள் மூலம் கூட மொனிடர் செய்ய முடியும்.
இவை அனைத்தையும் செய்து கொள்வது எப்படி என்பதை அழகிய முறையில் அனைத்து ஸ்க்ரீன் ஷாட்-களுடனும் எமக்கு கற்பித்து தருகிறது இந்த அருமையான மென்பொருள்.
இந்த மென்பொருளை பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த மென்பொருளில் காணப்படும் Help என்பதை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் பல்வேறு விதாமான மொனிடரிங் வேலைகளை செய்து கொள்ள முடியும் என்பதால், நான் குறிப்பிட்ட ஒரு சில முறைகளை மட்டுமே இந்த பதிவில் கூறியுள்ளேன். இந்த மென்பொருளை வேறு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற பகுதி 2 பதிவை விரைவில் எதிர்பாருங்கள்.
