சாதரணமாக ஸ்மார்ட் போன்களுக்கான கேம்ஸ்கள் ஒவ்வொரு படிகளை கொண்டதாக தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. உதாரனத்திட்கு குறிப்பிட்ட ஒரு லெவல்-ஐ நீங்கள் வெற்றிகரமாக விளையாடி முடித்தால் தான் அடுத்த லெவல்-ஐ விளையாடக்கூடியதாய் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஒரு லெவல்-ஐ விளையாடி முடிக்க உங்களிடம் போதுமான புள்ளிகளோ அல்லது கொயின்-களோ இல்லை என்றால் அவற்றை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கும்.
ஆகவே இப்படி எம்மை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கும் கேம்ஸ் களை ஹேக் செய்து எமக்கு தேவையான அளவு புள்ளிகலையோ அல்லது கொயின்-களையோ பெற்றுக்கொண்டு எமது விருப்பம் போல் தேவையான லெவல்-களை விளையாடிக் கொள்ள கூடியதாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஆம். நீங்கள் ஆன்ராயிடு போன் ஒன்றிற்கு உரிமையாளர் எனில் உங்களால் பெரும்பாலான கேம்ஸ்களை ஹேக் செய்து உங்களுக்கு இஷ்டம் போல் விளையாடிக்கொள்ள முடியும்.
குறிப்பு
இந்த செயலியின் அனைத்து செயற்பாடுகளுமே ரூட் செய்யப்பட்ட ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களிலேயே சரியாக செயற்படும். இருந்த போதிலும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களது ரூட் செய்யப்படாத ஆன்ராயிடு போன்களில் இருந்தும் கூட கேம்ஸ்களை ஹேக் செய்ய முடியும்.
இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சரி..! எமக்கு தேவையான ஆன்ராயிடு கேம்ஸ்-களை எப்படி மிக இலகுவாக ஹேக் செய்வது என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தரப்பட்டிருக்கும் ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்யக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். அதிலே உங்களது போனில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளும் பட்டியலிட்டு காட்டப்படும்.
அடுத்து Create Modified... என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Rebuild... என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுடைய குறிப்பிட்ட கேம்-ஐ ஹேக் செய்யப்படும் நடைமுறை சென்றுகொண்டிருக்கும். சிறிது நேரம் பொறுத்திருங்கள்.
ஹேக் முடிவடைந்த பின்னர், கீழே காட்டப்படுவது போல் திரை ஒன்று தோன்றும். அதிலே Go to File என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் ஹேக் செய்யப்பட்ட உங்களுடைய கேம் பைல் காட்டப்படும்.
அடுத்து குறிப்பிட்ட அந்த பைல்-ஐ கிளிக் செய்து Install என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறிப்பிட்ட கேம் ஆனது ஹேக் செய்யப்பட்டு விட்டது. நீங்கள் ஹேக் செய்த கேம்-ஐ உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பித்து பாருங்கள். இப்போது குறிப்பிட்ட கேம்-ஐ உங்கள் இஷ்டம் போல் விளையாடிக்கொள்ள கூடியதாய் இருக்கும்.
மிக இலகுவாக ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் இந்த செயலியை எமது போனுக்கு பெற்றுக்கொள்வது எப்படி என்று பார்ப்போம். (இந்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது)
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 18' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.





