உலாவிகளில் போன்றே, சிஸ்டம் பைல்-களில் இன்னும் பல இடங்களில் எமது கடவுச்சொற்கள் எமக்கு தெரியாமல் சேமிக்கப்படுகின்றன. அவற்றிற்கு உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் ஒவ்ட்லுக் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதனுடைய கடவுச்சொல் உங்களது கணனியில் எங்கு சேமிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியாது.
ஆகவே இவ்வாறு எமக்கு தெரியாமலேயே எமது கணனியில் சேமிக்கப்படும் எம்முடைய கடவுச்சொற்களை மிக இலகுவாக மற்றவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
இதை செய்து கொள்ள ஒரு சில நொடிகளும் ஒரு பென்-டிரைவ்-ம் இருந்தாலே போதும்.
ஆகவே நாம் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், அல்லது நாம் கண் இமைக்கும் சந்தர்ப்பத்தில் எம்முடனே இருக்கும் கயவர்கள் மிக இலகுவாக எமது அனைத்து கடவுச்சொட்களையும் திருடி விட முடியும்.
பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி, எமது கணனியில் இருக்கும் அனைத்து கடவுச்சொட்களையும் எப்படி திருட முடியும் என்று பார்ப்போம்.
முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை கண்டறிய உதவும் 'வீவர் டூல் கிட்' பேக்-ஐ உங்களது கணனிக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த பைல்-ஐ எக்ஸ்ரேக்ட் செய்து, அதிலே இருக்கும் பைல்-களை உங்களது பெண்டிரைவ்-க்கு கோபி செய்யுங்கள்.
அடுத்து உங்களது பெண் டிரைவ்-ஐ குறித்த கணனியில் இணையுங்கள்.
அடுத்து உங்களது பெண் டிரைவ்-இல் இருக்கும் 'ஹேக்' எனப்படும் பைல்-ஐ டபுள் கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. இப்போது குறித்த கணனியில் இருக்கும் அனைத்து கடவுச்சொற்களும் அந்த அந்த பைல் அடிப்படையில் உங்களுக்கு காட்டப்படும்.
மேலும் குறித்த கணனியில் இருக்கும் அனைத்து கடவுச்சொற்களும் உங்களது பெண் டிரைவ்-இல் 'டெக்ஸ்ட் பைல்' ஆக சேமிக்கவும் படும்.
சரி.. பெண்டிரைவ் மூலம் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள உதவும் வீவர் டூல் கிட்-ஐ உங்களது கணனிக்கு டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 09' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது கணனியில் இருக்கும் அனைத்து கடவுச்சொட்களையும் ஒரு சில நொடிகளில் யாரேனும் ஒரு பெண்டிரைவ்-ஐ பயன்படுத்தி திருடி விட முடியும்.
இவை தவிர, கணனிகளில் காணப்படும் அனைத்து கடவுச்சொட்களையும் தெரிந்து கொள்ள 'நீரோ சாப்ட்' தளத்தில் காணப்படும் 'பாஸ்வேர்ட் வீவர்' மென்பொருட்கள் உதவுகின்றன. உதாரணமாக குறித்த கணணி ஒன்றில் இருக்கும் வைபை கடவுச்சொல் என்ன போன்றவைகளை எல்லாம் 'நீரோ சாப்ட்' தளத்தில் இருக்கும் மென்பொருட்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
'நீரோ சாப்ட்' தளத்திற்கு செல்ல..
ஆகவே இந்த தளத்தில் காணப்படும் குறித்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் ரன் செய்வதால், குறித்த மென்பொருளில் உள்ளடங்கும் கடவுச்சொற்களை தெரிந்து முடியும்.

