இதற்கு மிக முக்கிய காரணம், எமது கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இன்டர்நெட் இணைப்புக்கு பொறுப்பான நபர், இணைய பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எமது கணணி மற்றும் லேப்டாப்-இல் காணப்படும் இன்டர்நெட் இணைப்பை ப்லோக் செய்து இருப்பார்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் காணப்படும் இன்டர்நெட் இணைப்பை எப்படி எமது போனுக்கு மிக இலகுவாக பெற்றுக்கொள்வது என்ற சிறப்பு பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கல்லூரி/ அலுவலக இன்டர்நெட்-ஐ எமது போனுக்கு பெற்றுக் கொள்வது எப்படி?
சரி.. இன்றும் இதே மாதிரியான கல்லூரி மற்றும் அலுவலகங்களில் காணப்படும் இன்டர்நெட் இணைப்புக்களில் ப்லோக் செய்யப்பட்டிருக்கும் டவுன்லோட்-களை ஒரு பென்டிரைவ்-ஐ பயன்படுத்தி எப்படி மிக இலகுவாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.
ஆகவே உங்களது கல்லூரி அல்லது அலுவலகத்தில் ப்லோக் செய்யப்பட்டிருக்கும் டவுன்லோட்-களை மிக இலகுவாக தரவிறக்கி கொள்ள உங்களிடம் பென் டிரைவ் ஒன்று இருக்க வேண்டும்.
அடுத்து கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் டவுன்லோடர் மென்பொருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளை உங்களது பென் டிரைவ்-க்கு பிரதி செய்து கொள்ளுங்கள்.
அதன் பின் இந்த மென்பொருளை வின்ரார்-ஐ பயன்படுத்தி பென்டிரைவ்-இல் எக்ஸ்ரேக்ட் செய்யுங்கள்.
அடுத்து கீழே படத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கும் பைல்-ஐ டபுள் கிளிக் செய்து ஆரம்பியுங்கள்.
அடுத்து கீழே படத்தில் குறித்து காட்டப்பட்டிருப்பது போல், செட்டிங்க்ஸ் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து மீடியா என்பதை கிளிக் செய்து, அதிலே 'வெப்சைட் மொனிடர்' என்பதில் டிக்கை செயட்படுத்துங்கள்.
இதே போன்று, சாப்ட்வேர், டாகுமென்ட் என்று இருப்பதிலும் 'வெப்சைட் மொனிடர்' எனும் டிக்கை செயட்படுத்துங்கள்.
இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது நீங்கள் குறித்த அலுவலக அல்லது கல்லூரி கணனியில் ஏதேனும் ஒரு ப்லோக் செய்யப்பட்ட பைல்-ஐ டவுன்லோட் செய்ய முயட்சித்தால், டவுன்லோட் ப்லோக் என்ற வாசகம் தோன்றும்.
ஆனால் நீங்கள் பென் டிரைவ்-இல் நிறுவி இருக்கும் குறித்த மென்பொருளில் நீங்கள் டவுன்லோட் செய்ய முயற்சித்த குறித்த பைல் தானாக டவுன்லோட் செய்யப்பட ஆரம்பிக்கப்படும்.
ஆகவே மிக இலகுவாக எமது கல்லூரி மற்றும் அலுவலக கணனிகளில் ப்லோக் செய்யப்பட்டிருக்கும் டவுன்லோட்-களை கடந்து செல்ல உதவும் இந்த டவுன்லோடர் மென்பொருளை எப்படி தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 14' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)இந்த மென்பொருளை நேரடியாக கணனியில் நிறுவியும் பயன்படுத்த முடியும். ஆனால் குறித்த அலுவலக அல்லது கல்லூரி கணனியில் மென்பொருட்களை நிறுவுவதை தடை செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த மென்பொருளை பென் டிரைவ் ஒன்றில் இருந்து பயன்படுத்துவதால் கணனியில் நிறுவ வேண்டிய தேவை ஏற்படாது.


