பேஸ்புக் பயன்படுத்தும் நாம் பேஸ்புக் உரிமையாளரான மார்க்-இன் பேஸ்புக் கணக்கை பின்தொடர்ந்து இருந்தால், அண்மையில் அவர் அறிமுகப்படித்திய பேஸ்புக் F8 என்ற விடயம் பற்றி தெரிந்திருப்போம்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்-இல் அதிகம் பேசப்பட்ட இந்த F8 கான்பரன்ஸ்-இல் மார்க் அறிமுகப்படுத்திய புதிய வசதி 'மெசஞ்சர் பொட்ஸ்' என்பதாகும்.
'மெசஞ்சர் பொட்ஸ்' என்றால் என்ன? இதை எமது பேஸ்புக் மெசஞ்சர் கணக்கில் செயற்படுத்துவது எப்படி என்ற ஒரு சிறப்பு பதிவை இன்று எமது தளத்தின் வாசகர்களுக்காக எழுதுகிறேன்.
'மெசஞ்சர் பொட்ஸ்' என்றால் என்ன?
'மெசஞ்சர் பொட்ஸ்' எனப்படுவது, எமது கேள்விகளுக்கு ஒரு ரோபோ விடையளிப்பது போன்ற ஒன்றாகும். சிறப்பு ப்ரோக்ராம் மூலம் அறிமுகமாகி உள்ள இந்த 'மெசஞ்சர் பொட்ஸ்' மூலம் நாம் குறித்த ஒரு பிரபல்யமான பேஜ்/ அல்லது தனி நபர் ஒருவருக்கு மெசஞ்சர் மூலம் அனுப்பும் செய்திகளுக்கு ஒரு மனித தலையீடு இல்லாமல் தானாக பதில் வருவதாகும்.
ஆகவே குறித்த பேஜ் அல்லது தனி நபர் ப்ரோபைல்-இற்கு நாம் அனுப்பும் மெசேஜ்-இல் இருக்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை, சிறப்பு ப்ரோக்ராம் கோடிங் பொட்ஸ் எமக்கு அனுப்பி வைக்கும்.
இந்த புதிய வசதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தினங்களே ஆகுவதால் இன்னும் பெரிய அளவிலான மெசஞ்சர் பொட்ஸ்-கள் சேவைக்கு வரவில்லை. ஒரு சில பிரபல்யமான பேஸ்புக் பேஜ்-களில் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள கூடியதாய் உள்ளது.
ஆகவே இதுவரை மெசஞ்சர் பொட்ஸ் அறிமுகமாகி இருக்கும் பேஸ்புக் பேஜ் மற்றும் ப்ரோபைல் பற்றிய விபரங்களை கீலே குரிப்பிடபப்ட்டிருக்கும் சயிட்-இல் தெரிந்து கொள்ள முடியும்.
'மெசஞ்சர் பொட்ஸ்' வசதியை எமது பேஸ்புக் கணக்கில் செயற்படுத்துவது எப்படி?
முதலாவதாக உங்களது பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்திடுங்கள்.
அடுத்து மெசஞ்சர் செயலியை ஆரம்பித்து + ப்லஸ் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள். அதிலே சர்ச் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு தேவையான பேஜ் அல்லது ப்ரோபைல்-ஐ தேடுங்கள்.
அதிலே பொட்ஸ் என்று இருப்பதற்கு கீழே இருக்கும் ப்ரோபைல்-ஐ தெரிவு செய்து உங்களது கேள்விகளை அனுப்புங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கான பதில் கிடைக்கும்.
இன்று வரை பேஸ்புக்-இல் பொட்ஸ் வசதி அறிமுகமாகி இருக்கும் பேஜ் மற்றும் ப்ரோபைல் விபரங்களை இந்த தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ள முடியும்.
இதுவரை ஒரு சில பிரபல்யமான பேஜ் மற்றும் ப்ரோபைல்-களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த மெசஞ்சர் பொட்ஸ் வசதி மிக விரைவில் மேலும் பல பேஜ்-களுக்கும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Tech in Tamil
Facebook
Tech News
பேஸ்புக் பொட்ஸ் என்றால் என்ன? இந்த வசதியை எமது பேஸ்புக் கணக்கில் பெறுவது எப்படி?



