கணணி மற்றும் லேப்டாப்-இல் காணப்படும் வைபை நெட்வொர்க்-களின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்வது எப்படி?

இன்று நாம் பார்க்கவிருப்பது, தொழிநுட்ப தேவையின் முக்கியமான ஒரு விடயமாக கருதப்படும் வைபை பற்றியது. இன்று ஸ்மார்ட் போன் மற்றும் கணணிகளை பயன்படுத்துவோரின் அத்தியவாசிய தேவையாக கருதப்படும் வைபை இணைப்புக்களை ஹேக் செய்து இலவசமாக பயன்படுத்துவது என்றால், அதை விட சந்தோசம் தர கூடிய விடயம் ஒன்று இல்லை என்று கூறும் அளவுக்கு வைபை உடைய தேவை இன்று எம்மத்தியில் காணப்படுகிறது.


எமது தளத்திலும் வைவை சம்மந்தமான பல்வேறு பதிவுகள் சென்ற நாட்களில் எழுதப்பட்டடன. அவற்றில் சில சிறந்த பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வைபை நெட்வொர்க்-ஐயே உங்களது போனில் இருந்து கட்டுப்படுத்தும் அதிபயங்கர ட்ரிக்

உங்களது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போன் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

இதன் தொடர்ச்சியாக இன்றும் வைபை சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். அதாவது குறித்த ஒரு கணணியிலோ அல்லது லேப்டாப்-இலோ காணப்படும் வைபை நெட்வொர்க்-களுடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ளும் முறை பற்றியது. இந்த முறை மூலம், உங்களது நண்பர்களின் கணனியில், அல்லது அலுவலக, கல்லூரி கணனிகளில் காணப்படும் வைபை நெட்வொர்க்-களின் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழ் குறிப்பிட்டுள்ள விண்டோஸ் மென்பொருள் எமக்கு உதவுகிறது.
இந்த  மென்பொருளை தரவிறக்கி குறிப்பிட்ட கணனியில் நிறுவி டெஸ்க்டாப்-இல் காணப்படும் ஐகான்-ஐ கிளிக் செய்து ஆரம்பியுங்கள்.


அடுத்த நொடியே குறிப்பிட்ட கணணி அல்லது லேப்டாப்-இல் காணப்படும் அனைத்து வைபை நெட்வொர்க்-களினுடைய சரியான கடவுச்சொல்லை இந்த மென்பொருள் பட்டியலிட்டு காட்டும்.


கணனிகளில் காணப்படும் வைபை நெட்வொர்க்-களின் கடவுச்சொல்லை மிக இலகுவாக தெரிந்து கொள்ள உதவும் இந்த பயனுள்ள மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிக்கி கொள்ளுங்கள்.

வைபை பாஸ்வேர்ட் வீவர்

ஆகவே இந்த முறை மூலம் , மிக இலகுவாக உங்களது நன்பர்களின் கணணிகளிலோ அல்லது அலுவலக மற்றும் கல்லூரி கணனிகளில் காணப்படும் வைபை நெட்வொர்க் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியும்.