ஆன்ராயிடு போன் ரேம்-ஐ உங்களது தேவைக்கு ஏற்ற போல கட்டுப்படுத்தி, போன் வேகத்தை அதிகரிக்க உதவும் செயலி

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை, தங்களுடைய ஸ்மார்ட் போன் மெதுவாக தொளிட்படுவது. ஸ்மார்ட் போன் ஒன்று மெதுவாக செயற்படுகிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் போனில் காணப்படும் ரேம்-இல் அளவே.

ஆகவே இன்றைய பதிவில், ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை வேகமாக்கி கொள்ள உதவும் மற்றுமொரு உபாயத்துடன் உங்களை சந்திக்கின்றேன்.

நாம் கூகுள் ப்லே ஸ்டோரில் சென்று பார்த்தால், ஆன்ராயிடு போனை வேகமாக்கி கொள்ள உதவும் பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன. அவற்றிலே ஒரு சில செயலிகள் இலவசமாகவும், ஒரு சில செயலிகள் பணம் செலுத்தியும் பெற வேடியதாய் உள்ளது.

ஆன்ராயிடு போனை வேகமாக்கி கொள்ள உதவும் பெரும்பாலான செயலிகள், செய்யும் பொதுவான ஒரு வேலை, போனில் இருக்கும் ரேம் பாவனையை கட்டுப்படுத்துவது. ஏனென்றால், எமது போனில் இருக்கும் ரேம் தான், எமது ஸ்மார்ட் போன் வேகத்தில் பெரும் பங்கு செலுத்துகிறது.


ஆகவே இந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க பல்வேறு ஆன்ராயிடு செயலிகள் காணப்படுகிறது. அவற்றிலே மிகவும் சிறந்த ஒரு செயலியாக காணப்படும் 'ஆன்ராயிடு ரேம் மேனேஜ்மன்ட்' செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இந்த செயலியை உங்களது போனில் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், எமது ஆன்ராயிடு போனில் இருக்கும் ரேம்-ஐ கீழ்வரும் இரு முறையான பாவனைகளுக்கு பிரித்து கொடுப்பதாகும். அதாவது,
  • போனில் இருக்கும் ரேம்-ஐ இலவசமாக வைத்து இருப்பதும்
  • மல்டி டாஸ்கிங் எனப்படும் முறைக்கு ரேம் அளவை பிரித்து கொடுப்பதும் ஆகும்.
(அதாவது நாம் எமது போனில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் போது, போன் மெதுவாக செயற்படும். இதற்கு காரணம் ரேம் அதிகமான அளவில் உபயோகிக்கப்படுவதேயாகும். ஆகவே எமது போனில் மல்டி டாஸ்கிங் வேலைகளை செய்து கொள்வதற்காக அதிகளவான ரேம்-ஐ பிரித்து கொடுப்பதே இதன் வேலை ஆகும்)

இது தவிர, உங்களது போனில் இருக்கும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக பயன்படுத்துவதட்கான Swap File-ஐயும் இந்த செயலி மூலம் உருவாக்கி கொள்ள முடியும்.


இது குறித்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே கீழ்வரும் ஆன்ராயிடு ரேம் மேனேஜ்மன்ட் செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து அதிலே ரேம் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து டியூன் ரேம் என்று இருப்பதை குறைத்து,
மல்டி டாஸ்கிங்-இற்கு 75%-ம், ப்ரீ மெமரி-க்கு 25%-ம் வைத்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து மறுபடியும் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Set on boot என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.


அவ்வளவு தான். இப்போதிலிருந்து உங்களது போனில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, போன் வேகத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் சிறப்பாக செயற்படும்.

இந்த அருமையான செயலியின் இலவச பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்கும். 

ஆனால் இலவச பதிப்பில், இந்த செயலியில் கிடைக்ககூடிய சிறந்த வசதிகள் காணப்பட மாட்டது. 

ஆகவே ஆன்ராயிடு போன் ரேம்-ஐ எமது தேவைக்கு ஏற்ற போல கட்டுப்படுத்த உதவும் இந்த ரேம் மேனேஜ்மன்ட் செயலியின், பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி உங்களது போனுக்கு இலவசமாக பெற்று கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 29' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)

குறிப்பு

இது ஒரு அதிசக்தி வாய்ந்த செயலி என்பதால், உங்களுக்கு இந்த செயலி குறித்தான தெளிவான அறிவு இல்லையென்றால், தயவு செய்து வேறு செட்டிங்க்ஸ்-களை செயற்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்யும் பட்ச்சத்தில் உங்களது போனுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.