Reliance Jio அறிமுகப்படுத்திய 75GB அளவான 4G இன்டர்நெட் வெறும் 200 ரூபாய்க்கு..

சென்ற வாரத்தில் இந்தியா முழுவதும் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு விடயம், Reliance நிறுவனத்துக்கு சொந்தாமன Reliance Jio அறிமுகப்படுத்தும் 75GB அளவான 4G இன்டர்நெட் இணைப்புக்கள் வெறும் 200 ரூபாய்...

இந்த இன்டர்நெட் இணைப்பு சம்மந்தமான விளக்கங்கள் எமது தளத்தில் சென்ற வாரமே எழுதப்பட்டு இருந்தது. அதன் சுருக்கம் கீழே..


03/30/2016 ஆம் திகதி எழுதப்பட்ட பதிவு.

Reliance நிறுவனத்துக்கு சொந்தாமன Reliance Jio எனப்படும் 4G இன்டர்நெட் சேவையானது, மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது 75 GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை வெறும் 200 ரூபாக்கு வழங்கவிருக்கிறது. இந்த சலுகையுடன் சேர்த்து 4500 நிமிட இலவச டாக் டைம்-ஐயும் வழங்கவிருக்கிறது. இந்த அனைத்து சலுகைகளும் செயற்படுத்திய நாளில் இருந்து 3 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் வெளியான செய்தியை கீழே கீழே வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அனைத்து சலுகைகளும் பெரும்பாலும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தற்போது இந்த முயற்சியின் முதற்கட்டமாக குறித்த 4G சிம், Reliance ஊழியர்களுக்கு 75GB அளவான டேட்டாவுடன் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் அறிமுகமாகி உள்ளது.

Reliance நிறுவனத்தில் இருந்து வரும் செய்திகளின் படி, குறித்த 4G சிம்-ஐ தமது ஊழியர்கள் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் இது ஒரு பரீட்சிய முறையிலேயே முதலாவதாக தமது ஊழியர்களுக்கு மத்தியில் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே வெகு விரைவில் இந்த 4G டேட்டா சிம் 75GB அளவான டேட்டா மற்றும் 4500 நிமிட டாக் டைம் உடன் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.