ஆன்ராயிடு போனில் உங்களது குரலை மாற்றி பேச வேண்டுமா?

இன்றைய பதிவிலே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு சம்மந்தப்பட்ட விடயம் ஒன்றை அறிமுகப்படுத்த போகிறேன். ஏற்கனவே எமது தளத்தில் ஆன்ராயிடு போனை உங்களது குரல் மூலம் எப்படி லாக் செய்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வளங்கப்பட்டிற்குக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது முகம் அல்லது குரல் மூலம் ஆன்ராயிடு செயலிகளை லாக் செய்வது எப்படி?

இதே போல் இன்றைய பதிவிலும் எமது குரலுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பற்றிய பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் குறித்த எதோ ஒரு தேவையின் காரணமாக எமது குரலை மாற்றி சில ஆடியோ-களை பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படும்.


ஆனால் இந்த வேலையை செய்து முடிக்க எந்த விதமான செயலியை பயன்படுத்துவது என்பதில் பலபேர் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகவே எமது போனில் இருந்து எமது குரலை (வாய்ஸ் ரெகார்டிங்) தேவைக்கு ஏற்ற மாதிரி பல வகையாக எபெக்ட்-களுடன் மாற்றி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே சென்று குரலை மாற்றி பேச கூடியவாறான செயலிகளை தேடினால் அங்கே பலநூறு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகள் தமது வேலையை சரி வர செய்து முடிக்க தவறுகின்றன.

ஆகவே கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் நம் பேசும் குரலை மாற்றக்கூடிய மிகச்சிறந்த 2 செயலிகளை பற்றி பார்ப்போம்.

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் உங்களது குரலை பல்வேறு எபெக்ட்-களுடன் மாற்றக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்ருக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, உங்களது வாய்ஸ்-ஐ ரெகார்ட் செய்யுங்கள்.


ரெகார்டிங்-ஐ முடித்த பின்னர், குறித்த ரெகார்டிங் வாய்ஸ்-ஐ மாற்றக்கூடிய வசதி கிடைக்கும்.


மேலும் பச்சை நிற ஐகன்-ஐ கிளிக் செய்வதன் மூலம் குறித்த ரெகார்டிங்-ஐ வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளின் ஊடாக உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.


இவை மட்டுமில்லாது மேலும் பல வசதிகளை தருகிறது இந்த அருமையான வாய்ஸ் செஞ்சர் செயலி.

ஆகவே ஆன்ராயிடு போனுக்கான இந்த வாய்ஸ் செஞ்சர் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு வாய்ஸ் செஞ்சர் செயலி 1
ஆன்ராயிடு வாய்ஸ் செஞ்சர் செயலி 2

ஆனால் கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் இந்த இரண்டு செயலிகளிலும் அதிகளவான விளம்பரகள் காணப்படுகின்றன. ஆகவே முதலாவதாக வழங்கப்பட்டிருக்கும் வாய்ஸ் செஞ்சர் செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே வழங்கப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு நேரடியாக தரவிறக்கி கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 21' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.