இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்புக்கள் பெரும்பாலும் வைபை வசதி கொண்ட இன்டர்நெட் இணைப்புக்களாகவே காணப்படுகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம், இன்று சந்தைக்கு அறிமுகமாகும் தொலைக்காட்சி பெட்டி முதல், ஸ்மார்ட் வாட்ச் வரை அனைத்துமே வைபை இணைப்பு வசதி கொண்டதேயாகும்.
ஆகவே இன்று எமது வீடுகளில் காணப்படும் பெரும்பாலான இன்டர்நெட் இணைப்புக்கள் வைபை வசதி கொண்ட இன்டர்நெட் இணைப்புக்களாக காணப்படுகின்றன. ஆனால் இவ்வாறு எமது இன்டர்நெட் இணைப்புக்கள் வைபை வசதியை பெற்றுள்ளதால், நம்மில் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை, எமது வைபை இணைப்பு மீதான ஹேகிங் முயற்சி.
குறித்த ஒரு வைபை நெட்வொர்க்-ஐ ஸ்மார்ட் போனில் இருந்தபடியே ஹேக் செய்யும் வல்லமை கொண்ட செயலிகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. ஸ்மார்ட் போனில் இருந்தபடியே வைபை நெட்வொர்க் ஒன்றை ஹேக் செய்வது எப்படி என்பது பற்றிய பதிவுகள் தளத்தில் எமது ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன. அவற்றை நீங்கள் தவற விட்டு இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வது எப்படி?
ஆகவே எமது வைபை நெட்வொர்க்-ஐ என்ன தான் நாம் கடவுச்சொல் ஒன்றின் மூலம் பாதுகாத்து இருந்தாலும் ஹேக்கர்கள் மிக இலகுவாக எமது வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்து விடுகிறார்கள்.
இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து எமது வைபை நெட்வொர்க்-ஐ எப்படி பாதுகாத்து கொள்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.
இதற்கு இருக்கும் ஒரே வழி, எமது வைபை நெட்வொர்க்-ஐ மற்றவர்களிடம் இருந்து மறைப்பது தான். எமது வைபை நெட்வொர்க் மற்றவர்களுக்கு காட்டப்பட்டால் தான் அவர்கள் எமது வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்ய முயற்சிப்பார்கள். ஆகவே அதையே மறைத்து விட்டால், எமது வைபை நெட்வொர்க் பெரும்பாலும் பாதுகாக்கப்படும்.
சரி.. இதை எப்படி செய்வது என்று விளக்கமாக பார்ப்போம்.
முதலாவதாக உங்களது ரௌட்டர்-இற்கு லொகின் செய்யுங்கள்.
அதில் வைபை செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து SSID broadcast என்று இருக்கும் செட்டிங்க்ஸ்-ஐ தேடிப்பிடியுங்கள்.
இந்த செட்டிங்க்ஸ் ஒவ்வொரு ரௌட்டர்-இற்கும் வேறுபடும். ஆனால் கண்டிப்பாக இந்த செட்டிங்க்ஸ் 'வைபை' செட்டிங்க்ஸ் மெனு-வில் தான் காணப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.
அதிலே SSID broadcast என்பதை Off செய்து செட்டிங்க்ஸ்-ஐ சேமித்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களது வைபை நெட்வொர்க் மற்றவர்களிடம் இருந்து மறைக்கப்பட்டு விட்டது.
சரி.. மறைக்கப்பட்ட வைபை நெட்வொர்க் உடன் எப்படி ஒரு டிவைஸ்-ஐ எப்படி இணைத்து கொள்வது என்று பார்ப்போம்.
உங்களது போனில் வைபை செட்டிங்க்ஸ் மெனு-விற்கு சென்று, அதிலே புதிய வைபை நெட்வொர்க் ஒன்றை மனுஅல் ஆக சேர்த்து கொள்ளும் வசதியை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து, உங்களது வைபை நெட்வொர்க்-இன் பெயர் மற்றும் நெட்வொர்க் டைப் உடன் கடவுச்சொல்லையும் வழங்குவதன் மூலம் குறித்த வைபை நெட்வொர்க் உடன் இணைந்து கொள்ள முடியும்.
இதே முறையை பயன்படுத்தி கணணி அல்லது லேப்டாப்-இலும் குறித்த வைபை நெட்வொர்க்-ஐ இணைத்து கொள்ள முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே மேலே விளக்கப்படுத்தப்பட்ட முறை மூலம் உங்களது வைபை நெட்வொர்க்-ஐ மற்றவர்களிடம் இருந்து மறைப்பதன் மூலம், உங்களது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்படாமல் தடுக்க முடியும்.
Tech in Tamil
Internet
Tips and Tricks
ஹேகர்களிடம் இருந்து வைபை நெட்வொர்க்-ஐ பாதுகாக்க எமது வைபை நெட்வொர்க்-ஐ மறைப்பது எப்படி?


