ஸ்மார்ட் போன்களுக்கான வைபை சம்மந்தமான மற்றுமொரு பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் வைபை என்பது பிரபலாமான ஒரு வார்த்தை ஆகும். எங்காவது இலவசமாக வைபை கிடைக்காத என்று ஏங்கி கிடக்கும் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு இலவச வைபை சம்மந்தப்பட்ட ஒரு உபாயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
அதாவது நாம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க பயன்படுத்தும் ஏ.டி.எம் இயந்திரங்களில் காணப்படும் வைபை நெட்வொர்க் உடன் எமது ஸ்மார்ட் போனை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஏ.டி.எம் இயந்திரத்தில் எதுக்கு வைபை என்று கேட்கிறீர்களா? ஏ.டி.எம் இயந்திரங்களில் பணப்பரிமாற்ற தொழிற்பாடுகளை செயற்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்கள் வைபை தொழிநுட்பம் மூலம் இன்டர்நெட் இணைப்புகளை பெற்றுள்ளன.
இவ்வாறு ஏ.டி.எம் இயந்திரங்களில் காணப்படும் வைபை நெட்வொர்க் ஆனது பெரும்பாலும் மறைக்கப்பட்டே காணப்படும். இவ்வாறான வைபை நெட்வொர்க் ஒன்றுடனே எமது ஸ்மார்ட் போனை இணைத்து கொள்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.
குறிப்பு
இந்த உபாயம் அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களிலும் வேலை செய்யுமா என்பது சந்தேகமே. எனது நண்பர் ஒருவர், இதை முயற்சித்து பார்த்து விட்டு என்னிடம் கூறிய பின்னரே இந்த உபாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆகவே நீங்களும் முயற்சித்து பாருங்கள். எல்லாமே ஒரு முயற்சி தானே...!
இந்த முறை மூலம் ஏ.டி.எம் வைபை நெட்வொர்க்-களுடன் இணைய முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூட கருதப்படலாம். ஆகவே இதனால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் நாம் பொறுப்பல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவதாக உங்களது ஸ்மார்ட் போனில் வைபை செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள்.
அங்கே புதிய வைபை நெட்வொர்க் ஒன்றை இணைத்து கொள்வதற்கான செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்யுங்கள். (கீழே படத்தில் காட்டியுள்ளவாறு காணப்படுவதை கிளிக் செய்யுங்கள்)
அடுத்து நெட்வொர்க் SSID என்பதில் SSID1 என்று டைப் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
இதே போல் SSID2, 3 என்று 10 வரை நெட்வொர்க்-களை உருவாக்குங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களுக்கு அருகில் உள்ள ஏ.டி.எம் ஒன்றிற்கு செல்லுங்கள். இப்போது உங்களது போன் ஏ.டி.எம் இயந்திரத்தின் வைபை நெட்வொர்க் உடன் எந்தவிதமான கடவுச்சொல்லும் இல்லாமல் இணையக்கூடியதாய் இருக்கும்.
Tech in Tamil
Internet
Tips and Tricks
ஏ.டி.எம் இயந்திரங்களில் மறைந்து காணப்படும் வைபை நெட்வொர்க் உடன் எமது போனை இணைப்பது எப்படி?



