இன்றைய பதிவிலே உங்களது விண்டோஸ் கணனிகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்துடன் வந்திருக்கிறேன். விண்டோஸ் இயங்குதள கணணிகளை பயன்படுத்தும் நாம் அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது தலத்தில் உங்களது விண்டோஸ் கணணிகளை யாராவது ஹேக் செய்ய நினைத்தால், கணணி தான லாக் ஆகும்படி செய்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.
அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
கணணியை யாராவது ஹேக் செய்ய நினைத்தால் கணணி தானாக லாக் ஆகும்படி செய்வது எப்படி?
சரி.. இன்றும் இதே மாதிரியான ஒரு விண்டோஸ் கணணி பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பற்றி பார்ப்போம். அதாவது குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் நாம் எமது கணணியை ON செய்தபடியே வைத்து விட்டு எங்கு சரி சென்றாலோ அல்லது எமக்கு தெரியாமல் எமது கணணியை வேறு யாராவது பயன்படுத்தினாலே எப்படி மிக இலகுவாக எமது ஸ்மார்ட் போனில் இருந்தபடியே எமது கணணியை Off அல்லது லாக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
குறிப்பு
இந்த உபாயம் மூலம் எமது கணணியை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எமது கணனியில் கட்டாயமாக இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் குறிப்பிட்டுள்ள விண்டோஸ் கணனிகளுக்கான 'ரிமோட் ஷட்டௌனர்'.
இந்த மென்பொருளை உங்களது கணனியில் நிறுவி டாஸ்க் பார்-இல் இருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்து ஆரம்பியுங்கள்.
அடுத்து உங்கள் தேவைக்கு ஏற்ற போல செட்டிங்க்ஸ்-களை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளின் ஐகான்-ஐ ரைட் கிளிக் செய்து Option என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதில் ரிமோட் என்பதை கிளிக் செய்து, உங்களுக்கான கடவுச்சொல் ஒன்றை செட்டிங்க்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து 'அப்டேட் ஸ்டேடிக்...' என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது கணனியில் இருக்கும் உலாவி ஒன்று திறக்கப்பட்டு கீழே படத்தில் காட்டியுள்ளவாறன IP முகவரி ஒன்று காட்டப்படும்.
இந்த முகவரிக்கு உங்களது போனில் இருக்கும் உலாவி ஒன்றின் மூலம் சென்று அதிலே நீங்கள் ஏற்கனவே உங்களது கணனியில் செட்டிங்க்ஸ் செய்த பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் என்பவற்றை வழங்கி லொகின் செய்யுங்கள்.
ஆகவே இப்போது உங்களது போனில் இருந்தபடியே உங்களது கணணியை Off வசதி கிடைக்கும்.
விண்டோஸ் கணணிகளை எமது ஸ்மார்ட் போனில் இருந்தபடியே கட்டுப்படுத்த உதவும் இந்த ரிமோட் மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
விண்டோஸ் ரிமோட் மென்பொருள்
மேலும் கணணியை 'ஷட் டவ்ன்' செய்வது மட்டுமில்லாமல் கணணியை ரீஸ்டார்ட் செய்வது, லாக் செய்வது என்று மேலும் பல வசதிகளை இந்த மென்பொருள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
iPhone
Tips and Tricks
ஸ்மார்ட் போனில் இருந்து கணணியை Off லாக் மற்றும் ரீஸ்டார்ட் செய்வது எப்படி?





