குறித்த பொருளை அல்லது இடத்தை போட்டோ ஒன்று எடுப்பதன் மூலம், அது பற்றி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை வைத்து இருக்கும் நாம், அவற்றை வெறும் அழைப்புக்களை மேட்கொள்வதட்காக மட்டுமே பயன்படுத்துவதில்லை. இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் போனுக்குண்டான அடிப்படை வசதிகளையும் தாண்டி, பல்வேறு பயனுள்ள வசதிகளை தருகிறது.

இதை அடிப்படையாக வைத்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட சில பதிவுகளை கீழே பட்டியலிட்டு இருக்கிறேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?

ஆண்ராயிடு போனை ஸ்பை கேமரா ஆக மாற்றி கணணிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?



அந்த வகையில் இன்றைய பதிவிலே மற்றுமொரு பயனுள்ள, அதே போல் சுவாரஸ்யமான ஒரு விடயத்தை பற்றி பார்ப்போம். சாதாரணமாக நாம் ஏதேனும் ஒரு பொருள் அல்லது இடம் பற்றி தெரியவில்லை என்றால், கூகுள் சர்ச் மூலம் தேடி தெரிந்து கொள்வோம்.

ஆனால் அப்படியல்லாமல் உங்களது போன் மூலம் குறித்த இடத்தையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பதன் மூலம் குறித்த பொருள்/ இடம் சம்மந்தமான அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்.. இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க கீழே குறிப்பிட்டுள்ள ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கான சிறப்பு கேமரா உதவுகிறது.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, குறித்த இடத்தையோ பொருளையோ போட்டோ ஒன்று எடுங்கள்.


அடுத்த நொடியே இந்த செயலை குறித்த போட்டோவை ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும்.


ஒரு சில நொடிகளில், ஸ்கேன் முடிவடைந்து குறித்த பொருள் சம்மந்தமான தகவல்கள் உங்களுக்கு காட்டப்பட்டும்.


ஆகவே இந்த செயலியை பயன்படுத்தி ஒரு போட்டோ எடுப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களினதும் பெரும்பாலான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு செயலி
ஐபோன் செயலி

சுவாரஸ்யமாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும் இந்த செயலி, உங்களது ஸ்மார்ட் போனில் கட்டாயம் நிறுவப்பட்டிருக்க வேண்டிய ஒரு செயளியாகவே கருதப்படுகிறது.