வாட்ஸ்அப் குழுவை ஹேக் செய்து, எல்லையில்லாத அளவு நண்பர்களை இணைத்து கொள்வது எப்படி?

எமது தளத்தில் எழுதப்படும் வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுகள் வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்று பெறுவதால், இன்றும் மற்றுமொரு வாட்ஸ்அப் சம்மந்தமான ஹேகிங் உபாயம் ஒன்றுடன் உங்களை சந்திக்கின்றேன்.

அதற்கு முன்னர், எமது தளத்தில் எழுதப்பட்ட சில சிறந்த வாட்ஸ்அப் ஹேக் உபாயங்கள் பற்றிய பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிக்கவும் வாசித்த பின் தோறும் நீல நிற டிக்கை மறைக்கவும் ஒரு ட்ரிக்

உங்கள் நண்பரின் வாட்ஸ் அப் மெசேஜ்-களை அவருக்கு தெரியாமல் பார்ப்பது எப்படி?

வாட்ஸ்அப்-ல் ஒரு போட்டோக்குள் இன்னுமொரு போட்டோவை மறைத்து அனுப்புவது எப்படி?


ஆகவே இன்றைய பதிவில் மற்றுமொரு வாட்ஸ்அப் குழு சம்மந்தப்பட்ட ஒரு ஹேகிங் பற்றி பார்ப்போம். எம் அனைவருக்குமே தெரிந்தது போல, வாட்ஸ்அப் குழுக்களில் 256 நண்பர்களுக்கு மேல் சேர்த்து கொள்ள முடியாது.

ஆனால் இன்று, குறித்த வாட்ஸ்அப் குழு ஒன்றில் 256 நண்பர்களுக்கு மேல் எப்படி சேர்த்து கொள்வது என்று பார்ப்போம்.

இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சரி... வாட்ஸ்அப் குழு ஒன்றில் 256 நண்பர்களுக்கு மேல் எப்படி சேர்த்து கொள்வது எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குழு நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ரூட் அனுமதியை வழங்குங்கள்.

அடுத்து இந்த செயலியில் Data என்று இருப்பதை டபுள் கிளிக் செய்யுங்கள்.


திறக்கும் திரையிலும் மற்றுமொரு Data என்ற பைல் காணப்படும். அதையும் டபுள் கிளிக் செய்து திறவுங்கள்.

அதிலே com.whatsapp என்று இருப்பதை கிளிக் செய்து திறவுங்கள். (பெரும்பாலும் இது கடைசியில் இருக்கும்.)


அடுத்து shared_prefs என்ற பைல் -ஐ திறவுங்கள்.


அங்கே கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கும் பைல்-ஐ,


text editor ஒன்றுடன் திறவுங்கள்.


அதிலே participant_size_limit என்பது, 256 என்று இருக்கும். அதை 300 அல்லது வேறு ஏதேனும் ஒரு இலக்கத்திற்கு என்று மாற்றி விட்டு, மேலே சேமிப்பதற்கான ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போது நீங்கள் மேலே வழங்கிய இலக்க அளவு நண்பர்களை உங்களது வாட்ஸ் அப் குழுவில் இணைத்து கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப் குழு ஒன்றை ஹேக் செய்து எமது நண்பர்கள் அனைவரையும் சேர்த்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

குறிப்பு

என்னிடம் பெரிய அளவு நண்பர்களை கொண்ட வாட்ஸ்அப் குழு எதுவுமே இல்லை என்பதால், இந்த முறை மூலம் எத்தனை நண்பர்களை குறித்த வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்து கொள்ள முடியும் என்பதை சரியாக கூற முடியவில்லை.