இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்-க்கு மிகவும் பிரபல்யமான ஒரு தலமே ப்லிப்கார்ட் (Flipkart). எமக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் ஸ்மார்ட் போனில் இருந்தபடியே வாங்கிக்கொள்ள இந்த தளம் எமக்கு மிகவும் உதவியாக உள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை சிறந்த முறையில் கையாண்டு தனக்கென தனி இடத்தை இந்திய மக்களிடையே பிடித்துள்ள ப்லிப்கார்ட், ஆன்லைன் ஷாப்பிங்-இன் சக்கரவர்த்தி என்றே கூற வேண்டும்.
நம் அனைவருக்குமே தெரிந்தது போல ப்லிப்கார்ட், குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் தனது வாடிக்கையாளர்களின் நன்மையை கருத்திற்கொண்டு மிகப்பெரிய சலுகை அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்யும்.
அந்த வகையில் அண்மையில் ப்லிப்கார்ட் தளத்தினால் நடாத்தப்பட்ட Big Billion Days Sale இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மறுபடியும் ப்லிப்கார்ட் தளம் தனது சலுகை வியாபரத்தை Big Shopping Days என்ற பெயரில் அறிவித்து உள்ளது.
குறித்த சலுகை விலை விற்பனையை ப்லிப்கார்ட் தளத்தில் எதிர்வரும் மார்ச் 7-9ஆம் திகதி வரை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். இந்த முறை மிகப்பெரிய அளவில் பொருட்களின் மீது சலுகை விலையை வழங்கவுள்ளதாக ப்லிப்கார்ட் தளத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முறை ப்லிப்கார்ட் தளத்தினால் நடாத்தப்படும் சலுகை வியாபரத்தை ஸ்மார்ட் போன்களில் இருந்து மட்டுமல்லாது கணனியில் இருந்தும் கூட ஆர்டர் செய்ய முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
நம் அனைவருக்குமே தெரிந்தது போல, ப்லிப்கார்ட் சிறப்பு சலுகையின் போது ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு லட்ச்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடையே போட்டி காணப்படும். ஆகவே கீழ்வரும் கருத்துக்களை கவனத்திற்கொண்டு இந்த முறை நடைபெறும் ப்லிப்கார்ட் சிறப்பு சலுகை வியாபாரத்தில் உங்களுக்கு பிடித்த பொருளை மிக இலகுவாகவும் வேகமாகவும் ஆர்டர் செய்திடுங்கள்.
நீங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து ப்லிப்கார்ட் சலுகை வியாபரத்தின் மூலம் பொருட்கொள்வனவு செய்யப்போகிறீர்கள் என்றால், உடனடியாக ப்லிப்கார்ட் செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்திடுங்கள். இது ஆர்டர்-களை செய்யும் போது நேர தாமதத்தை தவிர்த்திடும்.
சலுகை தினத்தில் சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை தேடிக்கொண்டு இருக்காமல் முன்னேற்பாடாக இப்போதே தேடி வைத்து கொள்ளுங்கள். ஆகவே சலுகை தினத்தில் குறித்த பொருளை நேரடியாக ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
உங்களது பெயர் முகவரி மற்றும் கட்டண முறை விபரங்களை இப்போதே அப்டேட் செய்து வைத்திடுங்கள்.
ஆகவே மேல்குறிப்பிட்ட கருத்துக்களை கவனத்திற்கொண்டு உங்களுக்கு பிடித்த பொருளை சலுகை தினத்தில் சிறந்த விலையில் ஸ்மார்ட் ஆகவும் வேகமாகவும் ஆர்டர் செய்திடுங்கள்.
Tech in Tamil
General News
ப்லிப்கார்ட்-இன் (Big Shopping Days) மிகப்பெரிய சலுகை விலை வியாபாரம் மார்ச் 7-9 ஆம் திகதி வரை (2016)
