கணணி அல்லது ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் நாம் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக கணணி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான வைரஸ் தாக்குதல்களை குறிப்பிடலாம். இன்று கணணி அல்லது ஸ்மார்ட் போன்களுக்கான வைரஸ் தாக்குதல்கள் பல்வேறு முறைகள் மூலம் செயட்படுத்தப்படுகின்றன.
ஆகவே இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன்களுக்கான வைரஸ் தாக்குதல் சம்மந்தமான ஒரு பதிவை பார்ப்போம்.
பொதுவாக நாம் ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தை உபயோகிக்கும் போது, அல்லது ஸ்மார்ட் போன்களுக்கான செயலிகளை நிறுவும் போது எமது ஸ்மார்ட் போனிற்கு வைரஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆகவே நாம் எமது போனிற்கு சிறந்ததொரு வைரஸ் எதிர்ப்பு செயலியை நிறுவி வைரஸ் தாக்குதல்களில் இருந்து எமது போனை பாதுகாத்து கொண்டு இருக்கிறோம். இருந்த போதிலும், எமது போனில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை மீறி எப்படியாவது ஒரு சில வைரஸ்கள் எமது போனை தாக்குகின்றது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
இதற்கு முக்கிய காரணம், அனைத்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களும் ஒரே மாதிரியாக செயட்படாமையே. உங்களது போனில் நிறுவி இருக்கும் குறித்த ஒரு வைரஸ் எதிர்ப்பு செயலி, குறிப்பிட்ட ஒரு செயலியை அல்லது பைல்-ஐ பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னர், வேறு ஒரு வைரஸ் எதிர்ப்பு செயலி மூலம் குறித்த அதே பைல்-ஐ நாம் ஸ்கேன் செய்தால் வைரஸ் இருப்பதாக காட்டும்.
இதற்கு காரணம் குறிப்பிட்ட சில வைரஸ் எதிர்ப்பு செயலியால் அனைத்து வைரஸ்களையும் இனம்காண முடியாமையே.
இவ்வாறன சந்தர்ப்பமொன்றில் எமது ஸ்மார்ட் போன்களுக்கு வைரஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே சிறந்ததொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை எமது போனில் நிறுவுவது தற்போதைய கால கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறானதொரு பாதுகாப்பு மிக்க, அனைத்து வைரஸ்களையும் இனங்காண கூடியதான ஒரு செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
கீழ்வரும் ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு வைரஸ் கண்டுபிடிப்பு செயலி,
உலகின் மிகப்பிரபல்யமான 57 வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலம் உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் ஸ்கேன் செய்கிறது.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களும் பட்டியலிட்டு காட்டப்படும்.
அடுத்து நீங்கள் ஸ்கேன் செய்ய நினைக்கும் செயலியை கிளிக் செய்யுங்கள்.
சிறிது நேரத்தில் ஸ்கேன் முடிவடைந்து குறிப்பிட்ட செயலியில் வைரஸ் அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான பைல்-கள் இருக்கின்றதா என்று காட்டும்.
வைரஸ் அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான பைல் -கள் குறித்த செயலியில் இல்லை என்றால், ஆன்ராயிடு ஐகான் பச்சை நிறத்தில் காட்டப்படும்.
நீங்கள் ஸ்கேன் செய்த பைல் அல்லது செயலியில் ஏதேனும் வைரஸ் அல்லது ஆபத்தான பைல்-கள் காணப்படுமேயானால், ஆன்ராயிடு ஐகான் சிவப்பு நிறத்தில் காட்டப்படும்.
இந்த சிறப்பு வைரஸ் ஸ்கேன் செயலி, நீங்கள் ஸ்கேன் செய்யும் குறிப்பிட்ட செயலியை அல்லது பைல்-ஐ 57 விதமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களின் ஆன்லைன் வைரஸ் ஸ்கேன் செய்யும் தளத்தில் ஸ்கேன் செய்து உங்களுக்கு முடிவுகளை வழங்குகிறது..
ஆகவே மிகவும் பயனுள்ள ஒரு ஆன்ராயிடு வைரஸ் ஸ்கேன் செயலியாக காணப்படும் இந்த சிறப்பு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆன்ராயிடு சிறப்பு செயலி
பரிந்துரைக்கப்படும் பதிவு
மேலே நான் குறிப்பிட்ட 57 விதமான வைரஸ் ஆன்லைன் தளங்களில், மிகப்பிரபல்யமான கஸ்பர்ஸ்கை அவாஸ்ட், பிட்டிபன்டர் என்று மிகப்பிரபல்யமான அனைத்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tech in Tamil
Android
ஓரே செயலி, உங்களது ஆண்ராயிடை 57 விதமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலம் ஸ்கேன் செய்கிறது. இனி வைரஸ் வர நோ-சான்ஸ்



