அண்மைய நாட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் டாகுமென்ட் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.
இது குறித்தான பதிவு கூட எமது தளத்தில் எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-இல் டாகுமெண்ட்ஸ் கோப்புக்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்
அவ்வாறு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்பு எடுக்கும் வசதி இல்லாதது ஒரு பெரும் குறையாகவே வாட்ஸ்அப் பாவனையாளர்களின் மத்தியில் காணப்படுகிறது. ஆகவே அந்த குறையை தீர்க்கும் முகமாக இன்றைய பதிவில் வாட்ஸ்அப் மூலம் எப்படி வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வது என்று பார்ப்போம்.
இந்த குறித்த உபாயமானது வாட்ஸ்அப் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று இல்லை என்பதும், வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே வீடியோ அழைப்புக்களை வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
சரி.. வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக வீடியோ அழைப்புக்களை அறிமுகப்படுத்தும் வரை எல்லாம் பொறுத்திருக்க முடியாது, எங்களுக்கு இப்போதே வாட்ஸ்அப்-இல் வீடியோ கால் வேண்டும் என்று கூறும் நண்பர் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் உபாயத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியும்.
இந்த உபாயம் மூலம் வாட்ஸ்அப்-இல் தனி ஒரு நண்பருடனும் அல்லது ஐந்து நண்பர்கள் கொண்ட குழுவாகவும் வீடியோ அழைப்பு மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள கீழ்வரும் அன்றொஇட் மற்றும் ஐபோனுக்கான சிறப்பு செயலி எமக்கு உதவுகிறது.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவி கொள்ளுங்கள்.
குறித்த செயலியில் காணப்படும் Start Now என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் பச்சை நிற ஐகான்-இல் கிளிக் செய்யுங்கள்.
குறித்த நண்பர் அந்த லின்க்கை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடன் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இணைந்து கொள்ள முடியும்.
ஆகவே இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது போனிற்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.
அன்றொஇட் சிறப்பு செயலி
ஐபோன் சிறப்பு செயலி
பரிந்துரைக்கப்படும் பதிவு
குறிப்பு
இந்த செயலி மூலம் வாட்ஸ் அப் இல் வீடியோ அழைப்பு மேற்கொள்ள வேண்டுமென்றால் குறிப்பிட்ட நண்பரின் போனிலும் இந்த செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



