ஆன்ராயிடு மற்றும் ஐபோன் போல ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் பிரபல்யம் பெற்ற மற்றுமொரு ஸ்மார்ட் போன் தான், விண்டோஸ் ஸ்மார்ட் போன். இன்று அதிகமானோர் விண்டோஸ் ஸ்மார்ட் போன் பிரியர்களாக மாறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நியாயமான விலையில் சிறந்த வசதிகளுடன் விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு அறிமுகம் ஆகுவதாகும்.
ஆகவே இன்று விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரும்பாலான விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுக்கான விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட் பற்றிய அதிகாரபூர்வ செய்திகளை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பெரும்பாலான விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுக்கான விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட்-ஐ OTA மூலம் வழங்கவிருக்கிறது.
எதிர்வரும் நாட்களில் விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட்-ஐ பெறவிருக்கும் ஒரு சில விண்டோஸ் ஸ்மார்ட் போன்களை கீழே பட்டியலிடுகிறேன்.
1520, 930, 640, 640XL, 730, 735, 830, 532, 535, 540, 635 1GB, 636 1GB, 638 1GB, 430, 435, BLU Win HD w510u, BLU Win HD LTE x150q, MCJ Madosma Q501
மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட் போன்களில் எதாவது ஒன்றிற்கு நீங்கள் சொந்தக்காரர் என்றால், உங்களது ஸ்மார்ட் போனில் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட்-க்கான நோடிபிகேசன் காட்டபடுகிறதா என்று பரீட்சித்து கொள்ளுங்கள்.
குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள விண்டோஸ் ஸ்மார்ட் போன் மாடல் தவிர மேலும் பல விண்டோஸ் ஸ்மார்ட் போன் மாடல்கள், விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட்-ஐ பெறவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட் ஆனது 512 MB அளவான ரேம் வசதியை கொண்ட விண்டோஸ் போன்களுக்கு கிடைக்காது என மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
விண்டோஸ் 10 இயங்குதள அப்டேட்-ஐ உங்களது விண்டோஸ் போன் பெற வேண்டும் என்றால், கட்டாயமான தற்போது உங்களுடைய போனில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 10 இயங்குதளமானது கிட்டத்தட்ட 1.4 GB அளவாக இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
Tech in Tamil
Tech News
மைக்ரோசாப்ட்-இன் புதிய முயற்சி. ஸ்மார்ட் போன்களுக்கான விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம்.
