இன்றைய பதிவில் மற்றுமொரு பேஸ்புக் உடன் சம்மந்தப்பட்ட முக்கியமான ஒரு விடயத்தை பார்க்கலாம். பேஸ்புக்-ஐ உபயோகிக்கும் நாம் தினம்தோறும் பல்வேறு வகையான விடயங்களை பேஸ்புக் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம். இவற்றிலே, எமது தனிப்பட்ட போட்டோகள் வீடியோகள், நண்பர்களுடன் செய்த சேட் என்று பல்வேறு விதமான விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இப்படி நாம் அப்டேட் செய்யும் முக்கியமான போட்டோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தகவல் குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அழிந்து போன குறிப்பிட்ட புகைப்படமோ அல்லது ஒரு மெசேஜ் அல்லது வேறு ஏதேனும் ஒரு தகவல் கட்டாயமாக எமக்கு தேவை என்ற ஒரு நிலை வரலாம்.
ஆகவே இன்றையை பதிவில் அவ்வாறான ஒரு இக்கட்டான நிலை ஏற்படும் போது, எமது பேஸ்புக் கணக்கில் இருந்து அழிந்து போன அனைத்து விடயங்களையும் எப்படி மிக இலகுவாக மீட்டு கொள்வது என்று பார்ப்போம்.
உங்களது பேஸ்புக் கணக்கில் இருந்து அழிந்து போன குறிப்பிட்ட எதோ ஒரு போட்டோவோ அல்லது மெசேஜ் ஒன்றோ, மிக மிக முக்கியமானது என்றால், கீழ்வரும் முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட அந்த போட்டோவையோ அல்லது மெசேஜ் ஒன்றையோ மிக இலகுவாக மறுபடியும் பார்த்து கொள்ள முடியும்.
முதலாவதாக உங்களது பேஸ்புக் கணக்கிற்கு லொகின் செய்யுங்கள்.
அடுத்து செட்டிங்க்ஸ்-இற்கு சென்று General என்று இருப்பதில் காணப்படும் Download a Copy என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Download Archive என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் உங்களது பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல்லை வழங்குமாறு கேட்கும். அங்கே உங்களது கடவுச்சொல்லை வழங்கி உறுதி செய்யுங்கள்.
இப்போது உங்களது பேஸ்புக் கணக்கில் இதுவரை நீங்கள் பதிந்த அனைத்து பதிவுகள், போட்டோ, வீடியோ, கருத்துக்கள் என்று உங்களது அனைத்து பேஸ்புக் கணக்கு விபரங்களும் டவுன்லோட் ஆக தயாராகும்.
உங்களது அனைத்து தரவுகளும் தயாராகிய பின்னர், பேஸ்புக் ஆனது இந்த தகவல்களை உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு லிங்க் ஆக அனுப்பி வைக்கும்.
குறித்த லின்க்கில் சென்று உங்களது அனைத்து பேஸ்புக் தகவல்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். குறித்த பைல் ZIP போர்மட்-இல் தான் உங்களது கணனிக்கு டவுன்லோட் ஆகும்.
டவுன்லோட் ஆகி முடிந்த பின்னர், குறித்த பைல்-ஐ Extract செய்யுங்கள்.
அதிலே Index.html என்று இருக்கும் பைல் ஐ ஏதேனும் ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி திறவுங்கள்.
இப்போது உங்களது பேஸ்புக் கணக்கு ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை நீங்கள் பதிந்த அனைத்து விபரங்களையும் பார்த்து கொள்ள கூடியதாய் இருக்கும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது பேஸ்புக் கணக்கில் இருந்து அழிந்து போன அனைத்து தரவுகளையும் மிக இலகுவாக பார்த்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Facebook
Tips and Tricks
உங்களது பேஸ்புக் கணக்கில் இருந்து அழிந்த போட்டோ வீடியோ மெசேஜ் என்று அனைத்தையும் மிக இலகுவாக மீட்பது எப்படி?


