ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் நாம் துரதிஷ்ட வசமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், எமது ஸ்மார்ட் போன் தொலைந்து போவது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் நாம் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படி எந்த விதமான ட்ரக்கிங் செயலியும் இல்லாமல் கண்டு பிடிப்பது எப்படி என்ற சிறப்பு பதிவொன்றை ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கி இருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ட்ரக்கிங் செயலி இல்லாமலேயே திருட்டுப்போன/ தொலைந்த ஆன்ராயிடை கண்டு பிடிப்பது எப்படி?
இவ்வாறன ஒரு இக்கட்டான ஒரு நேரத்தில், நாம் முடிந்தளவு போனை தேடிப்பார்த்து விட்டு, அடுத்ததாக காவல் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்வோம். ஆனால் காவல் நிலையத்திலோ அல்லது சய்பர் க்ரைம்-இலோ நாம் முறைப்பாடு ஒன்றை செய்தால், அவர்கள் எம்மிடம் கண்டிப்பாக போனுடைய IMEI இலக்கத்தை கேட்பார்கள். எமது போனுக்கான IMEI இலக்கம் ஏற்கனவே தெரியும் என்றால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வழங்கி விடலாம்.
ஆனால் எம்முடைய போனின் IMEI இலக்கம் தெரியவில்லை என்றால் எப்படி IMEI இலக்கத்தை கண்டு பிடிப்பது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.
முதலாவதாக தொலைந்து போன உங்களது போனில் உபயோகித்த கூகுள் கணக்கு டேஷ்போட்-இற்கு கணணி மூலமாக லொகின் செய்யுங்கள்.
கூகுள் டேஷ்போட்-இற்கு லொகின் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
அங்கே ஆன்ராயிடு என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
கிளிக் செய்தவுடன் கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும். அங்கே உங்களது தொலைந்து போன ஆன்ராயிடு போனில் IMEI இலக்கம் காட்டப்படும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி மிக இலகுவாக எந்த விதனமான மென்பொருளும் இல்லாமல் உங்களது தொலைந்து போன போனின் IMEI இலக்கத்தை கண்டு பிடிக்க முடியும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
தொலைந்து போன ஆன்ராயிடு போனின் IMEI இலக்கத்தை கண்டு பிடிப்பது எப்படி?
