அதாவது இன்று ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் பெரும்பாலானோரின் தேவையாக இருப்பது, தங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்து 2 பேஸ்புக் கணக்குகளை உபயோகிப்பது, 2 வாட்ஸ்அப் கணக்குகளை உபயோகிப்பது என்று அனைத்துமே இரண்டாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த தேவையை மிக மிக இலகுவாக செய்து முடிப்பது எப்படி என்பதை ஒரு விளக்கமான பதிவாக ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பயனுள்ள பதிவை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
அன்றொஇட் போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் இரண்டாக உபயோகிக்க வேண்டுமா?
ஆகவே இன்றும் அதே போன்றதொரு பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அதாவது எமது அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் நாம் உபயோகிக்கும் செயலிகளை எப்படி எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதாகும்.
சாதாரணமாக கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக கிடைக்க கூடிய செயலிகளை நம் அனைவரும் ப்லே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி உபயோகித்து கொள்ள முடியும். ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு செயலியை பணம் செலுத்தி வாங்கி இருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் வழி மூலம் எமது ஸ்மார்ட் போனிற்கு பெற்றுக்கொண்டாலோ அதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
நாம் குறித்த ஒரு செயலியை எமது ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கி நிறுவும் போது, குறித்த செயலியில் உள்ள பைல்-கள் மட்டுமே எமது போனில் நிறுவப்படும். ஆனால் எமது போனில் குறித்த செயளியினுடைய APK பைல் எங்குமே கானப்படமாட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது போனில் இருக்கும் குறித்த சிறப்பு செயலி எமது நண்பர்களின் போனிலும் நிறுவப்பட்டு இருப்பது அல்லது அவர்களையும் நிறுவ வைப்பது என்பது சிரமமான காரியமே.
ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். எமது போனில் நிறுவப்பட்டு இருக்கும் அனைத்து செயலிகளின் APK பைல் -ஐயும் மிக இலகுவாக எமது நண்பருடைய போனிற்கு அனுப்ப முடியும்.
எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.
இப்போது உங்களது போனில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளும் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, மேலே படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருப்பது போல் APK என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் சிறப்பு செயலியை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து மேலே படத்தில் காணப்படும் நீல நிற ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த செயலியின் APK பைல்-ஐ ப்ளூடூத் வைபை, மின்னஞ்சல் அல்லது அதிலே காட்டப்பட்டிருக்கும் வேறு ஏதேனும் சேவைகளை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அன்றொஇட் போன்களுக்கு மத்தியில் மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக காணப்படும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது போனில் இருக்கும் சிறப்பு செயலியையோ அல்லது நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய செயலியையோ மிக இலகுவாக உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.



