பேஸ்புக் வீடியோ ப்ரொபைல் பிக் வசதி அறிமுகம். உங்களது பேஸ்புக் கணக்கிலும் வீடியோ ஒன்றை ப்ரொபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தியது போதும், பேஸ்புக் அலுப்பாகி விட்டது என்று ஒரு முடிவை எடுத்து நாம் பேஸ்புக்கில் இருந்து விலக முயற்ச்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எதாவது ஒரு புது விதமான பேஸ்புக்  வசதியை அறிமுகப்படுத்தி எம்மை பேஸ்புக் உடன் கட்டிப்போட மார்க் தவறியதில்லை.

அந்த வகையில் அண்மையில் வெளியான ஒரு சில சிறந்த பேஸ்புக் வசதிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?

இன்று உலகில் காணப்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில், முன்னிலையில் நிற்கும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது அடுத்த புதிய பேஸ்புக் வசதியை தனது பயனர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.


இந்த புத்தம்புதிய வசதி என்னவென்றால், எமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவுக்கு பதிலாக வீடியோ ஒன்றை வைப்பதாகும். இந்த வசதி வெகுவிரைவில் அறிமுகமாக இருப்பதாக ஒரு சில மாதங்களுக்கு முன்னரே பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்த நேரம் முதல் குறிப்பிட்ட சில பேஸ்புக் பயனர்களுக்கு இந்த புதிய வசதியை ஒவ்வொரு நாளும் வழங்கிக்கொண்டு இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த பேஸ்புக் ப்ரோபைல் வீடியோ வசதியை அனைத்து பேஸ்புக் பயனர்களின் மத்தியிலும் அறிமுகமாக்கி இருக்கிறது.

ஆகவே இனி நீங்களும் உங்களது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் 7 செக்கன் அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை உங்களது பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ ஆக வைத்து கொள்ள முடியும். இதுவரை இந்த வசதி ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த வசதி கணணி மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ வசதியை உங்களது ப்ரொபைல்-இலும் பெற்றுக்கொள்ள, உங்களது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் பேஸ்புக் கணக்கிற்கு லோக் ஆகி, உங்களது ப்ரொபைல்-இற்கு செல்லுங்கள்.

அங்கே தற்போது இருக்கும் உங்களது ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்யுங்கள்.

இப்போது, படத்தில் காட்டியுள்ளது போல் வீடியோ ப்ரொபைல் போட்டோவை செயட்படுத்துவதட்கான வசதி காட்டப்படும். அதை கிளிக்  மூலம், புதியதொரு வீடியோவையோ அல்லது ஏற்கனவே உங்களது போனில் இருக்கும் வீடியோ ஒன்றையோ உங்களது பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ ஆக வைத்து கொள்ள முடியும்.


குறிப்பு

உங்களது பேஸ்புக் ப்ரொபைல்-இல் வீடியோ ஒன்றை செட் அப் செய்வதற்கான வசதி இல்லை என்றால், உங்களது பேஸ்புக் செயலியை அப்டேட் செய்து விட்டு மறுபடியும் பாருங்கள். அப்போதும் குறித்த வசதி இல்லை என்றால், இந்த வசதி இன்னும் உங்களது பேஸ்புக் கணக்கிற்கு வரவில்லை என்று அர்த்தம்.

கவலை வேண்டாம்... உலகளாவிய ரீதியில் பேஸ்புக் வீடியோ ப்ரொபைல் வசதியை அனைத்து பயனர்களுக்கும் ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் வழங்க ஆரம்பித்து விட்டது. ஆகவே ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள். உங்களது பேஸ்புக் கணக்கிற்கும் இந்த புதிய வசதி வந்து சேரும்.